உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

அமையு மான மோனமும் அரன்இ ருந்த மோனமும் சமையும் பூத மோனமும் தரித்தி ருந்த மோனமும் இமையும் கொண்ட வேகமும் இலங்கும் உச்சி மோனமும் தமைய றிந்த மாந்தரே சடத்தை உற்று நோக்கிலார்.

பாய்ச்ச லூர் வழியிலே பரன்இ ருந்த சுழியிலே காய்ச்ச கொம்பின் நுனியிலே கனிஇ ருந்த மலையிலே வீச்ச மான தேதடா விரிவு தங்கும் இங்குமே

மூச்சி னோடு மூச்சைவாங்கு முட்டி நின்ற சோதியே.

சோதி சோதி என்றுநாடித் தோற்ப வர்சி லவரே ஆதி ஆதி என்றுநாடும் ஆட வர்சி லவரே வாதி வாதி என்று சொல்லும் வம்ப ரும்சி லவரே நீதி நீதி நீதிநீதி நின்றி டும்மு ழுச்சுடர்.

சுடர தாகி எழும்பி யெங்கும் தூப மான காலமே

91

345

346

347

இடர தாகிப் புவியும்விண்ணும் ஏக மாய்அ மைக்கமுன் படர தாக நின்றஆதி பஞ்ச பூதம் ஆகியே

அடர தாக அண்டம்எங்கும் ஆண்மை யாக நின்றதே.

348

நின்றி ருந்த சோதியை நிலத்தில் உற்ற மானிடர்

கண்ட றிந்து கண்குளிர்ந்து காத லுற்று லாவுவோர்

கண்ட முற்ற மேன்முனையின் காட்சி தன்னைக் காணுவார்

நன்றி அற்று நரலைபொங்கி நாத மும்ம கிழ்ந்திடும்.

349

வயங்கு மோனச் செஞ்சுடர் வடிந்த சோதி நாதமும்

கயங்கள் போலக் கதறியே கருவூ ரற்ற வெளியிலே

பயங்கொ டின்றி இன்றியே படர்ந்து நின்ற பான்மையே நயங்கள் கோவென் றேநடுங்கி நங்கை யான தீபமே.

350

தீப உச்சி முனையிலே திவாக ரத்தின் சுழியிலே கோப மாறு கூவிலே கொதித்து நின்ற தீயிலே

தாப மான மூலையில் சமைந்து நின்ற சூட்சமும்

சாப மான மோட்சமும் தடிந்து நின்றி லங்குமே.

தேசி கன்சு ழன்றதே திரிமு னையின் வாலையில் வேச மோடு வாலையில் வியன்இ ருந்த மூலையில் நேச சந்தி ரோதயம் நிறைந்தி ருந்த வாசலில்

வீசி வீசி நின்றதே விரிந்து நின்ற மோனமே.

351

352