உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

வாயில் கண்ட கோணமில் வயங்கும் ஐவர் வைகியே சாயல் கண்டு சார்ந்ததும் தலைமன் னாய்உ றைந்ததும் காய வண்டு கண்டதும் கருவூர் அங்கு சென்றதும் பாயும் என்று சென்றதும் பறந்த தேசி வாயமே.

பறந்த தேது றந்தபோது பாய்ச்ச லூரின் வழியிலே மறந்த தேகவ் வுமுற்ற வாணர் கையின் மேவியே பிறந்த தேஇ றந்தபோதில் நீடி டாமற் கீயிலே சிறந்து நின்ற மோனமே தெளிந்த தேசி வாயமே. வடிவு பத்ம ஆசனத் திருத்தி மூல அனலையே

மாரு தத்தி னால்எழுப்பி வாசல் ஐந்து நாலையும் முடிவு முத்தி ரைப்படுத்தி மூல வீணா தண்டினால்

முளரி ஆல யம்கடந்து மூல நாடி ஊடுபோய் அடிது வக்கி முடியளவும் ஆறு மாநி லங்கடந்து

அப்பு றத்தில் வெளிகடந்த ஆதி எங்கள் சோதியை உடுப திக்கண் அமுதருந்தி உண்மை ஞான உவகையுள்

உச்சி பட்டி றங்குகின்ற யோகி நல்ல யோகியே.

93

361

362

363

மந்தி ரங்கள் உண்டுநீர் மயங்கு கின்ற மானிடர் மந்தி ரங்கள் ஆவது மரத்தி லூறல் அன்றுகாண்

மந்தி ரங்கள் ஆவது மதித்தெ ழுந்த வாயுவை

மந்தி ரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே. உள்ள தோடி நம்பதோ உயிர்ஒ டுங்கி நின்றிடம் மெள்ள வந்து கிட்டிநீர் வினாவ வேண்டும் என்கிறீர் உள்ள தும்பி நப்பதும் ஒத்த போது நாதமாம் கள்ள வாச லைத்திறந்து காண வேண்டும் மாந்தரே

மந்தி ரங்கள் கற்றுநீர் மயங்கு கின்ற மாந்தரே மந்தி ரங்கள் கற்றநீர் மரித்த போது சொல்விரோ மந்தி ரங்கள் உம்முளே மதித்த நீரும் உம்முளே மந்தி ரங்கள் ஆவது மனத்தின் ஐந்து எழுத்துமே.

ஒரெ ழுத்து லிங்கமாய் ஓதும் அட்ச ரத்துளே

ஒரெ ழுத்தி யங்குகின்ற உண்மை யைநீர் அறிகிலீர் மூவெ ழுத்து மூவராய் முளைத்தெ ழுந்த சோதியை நாவெ ழுத்து நாவுளே நவின்ற தேசி வாயமே.

364

366

365

367