உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

இளங்குமரனார் தமிழ்வளம் 37

வாயி லிட்டு நல்லுரிசை அட்ச ரத்தொ லியிலே கோயி லிட்டு வாவியுமக் கொம்பி லேஉ லர்ந்தும் ஆயிலிட்ட காயமும் அனாதி யிட்ட சீவனும் வாயு விட்ட வன்னியும் வளர்ந்த தேசி வாயமே. அட்ச ரத்தை உச்சரித் தனாதி யங்கி மூலமாம் அட்ச ரத்தை யும்திறந்த தகோர மிட்ட லர்ந்ததும் அட்ச ரத்தில் உட்கரம் அகப்ப டக்க டந்தபின் அட்ச ரத்தில் ஆதியோ டமர்ந்த தேசி வாயமே. கோயிலும்கு ளங்களும் குறியி னில்குருக்களாய் மாயி லும்ம டியிலும் மனத்தி லேம யங்குறீர்

ஆய னைஅ ரனையும் அறிந்து ணர்ந்து கொள்விரேல் தாயி னும்த கப்பனோடு தான்அ மர்ந்த தொக்குமே.

384

385

386

கோயில் எங்கும் ஒன்றலோ குளங்கள் நீர்கள் ஒன்றலோ

தேயு வாயு ஒன்றலோ சிவனும் அங்கே ஒன்றலோ ஆய சீவன் எங்குமாய் அமர்ந்து வார தொன்றலோ காயம் ஈத றிந்தபேர்கள் காட்சி யாவர் காணுமே.

காது கண்கள் மூக்குவாய் கலந்து வார தொன்றலோ சோதி யிட்ட டுத்ததும் சுகங்கள் அஞ்சும் ஒன்றலோ ஓதி வைத்த சாத்திரம் உதித்து வார தொன்றலோ நாத வீட றிந்தபேர்கள் நாதர் ஆவர் காணுமே. அவ்வு தித்த அட்சரத்தின் உட்க லந்த அட்சரம் சவ்வு தித்த மந்திரம் சம்பு ளத்தி ருந்ததால்

387

388

மவ்வு தித்த மாய்கையால் மயங்கு கின்ற மாந்தர்காள் உவ்வு த்த்த தவ்வுமாய் உருத்த ரித்த துண்மையே.

389

அகால மென்னும் அக்கரத்தில் அக்க ரம்ஒ ழிந்ததோ அகார மென்னும் அக்கரத்தில் அவ்வு வந்து தித்ததோ உகார மும்அ காரமும் ஒன்றி நன்று நின்றதோ விகார மற்ற ஞானிகாள் விரித்து ரைக்க வேணுமே.

390

சத்தி யாவ துன்னுடல் தயங்கு சீவன் உட்சிவம்

பித்தர் காள்இ தற்குமேல் பிதற்று கின்ற தில்லையே சுத்தி ஐந்து கூடம்ஒன்று சொல்லி றந்த தோர்வெளி சத்தி சிவமும் ஆகிநின்று தண்மை யாவ துண்மையே.

391