உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

சுக்கி லத்து ளையிலே சுரோணி தக்க ருவுளே முச்ச துர வாசலில் முளைத்தெ ழுந்த மோட்டினில் மெய்ச்ச துர மெய்யுளே விளங்கு ஞான தீபமாய் உச்ச ரிக்கும் மந்திரம் ஓம்ந மசி வாயமே.

அக்க ரம்அ னாதிஅல்ல ஆத்து மாஅ னாதிஅல்ல புக்கி ருந்த பூதமும் புலன்க ளும்அ னாதிஅல்ல தக்க மிக்க நூல்களும் சாத்தி ரம்அ னாதிஅல்ல ஒக்க நின்று டன்கலந்த உண்மை காண்அ னாதியே. மென்மை யாகி நின்றதேது விட்டு நின்ற தொட்டதேது உண்மை யாக நீயுரைக்க வேணும் எங்கள் உத்தமா பெண்மை யாகி நின்றதொன்று விட்டு நின்ற தொட்டதை உண்மை யாய்உ ரைக்கமுத்தி உட்க லந்தி ருந்ததே.

அடக்கி னால்அ டங்குமோ அண்டம் அஞ்செ ழுத்துளே உடக்கி னால்எ டுத்தகாயம் உண்மை யென்று ணர்ந்துநீ சடக்கில் ஆறு வேதமும் தரிக்க ஓதி லாமையால்

விடக்கு நாயு மாயவோதி வேறு வேறு பேசுமோ.

உண்மை யான சக்கரம் உபாய மாய்இ ருந்ததும் தண்மை யான காயமும் தரித்த ரூபம் ஆனதும் வெண்மை யாகி நீறியே விளைந்து நின்ற தானதும் உண்மை யான ஞானிகள் விரித்து ரைக்க வேண்டுமே. எள்ள கத்தில் எண்ணெய்போல எங்கு மாகி எம்பிரான் உள்ள கத்தி லேயிருக்க ஊச லாடும் மூடர்காள்

கொள்ளை நாயின் வாலினைக் குணக்கெ டுக்க வல்லிரேல் வள்ள லாகி நின்றசோதி காண லாகும் மெய்ம்மையே.

97

392

393

394

395

396

397

வேணு மென்ற ஞானமும் விரும்பு கின்ற நூலிலே

தாணு வுண்டங் கென்கிறீர் தரிக்கி லீர்ம றக்கிலீர்

தாணு வொன்று மூலநாடி தன்னுள் நாடி உம்முளே காணு மன்றி வேறியாவும் கனாம யக்கம் ஒக்குமே.

வழக்கி லேயு ரைக்கிறீர் மனத்து ளேத விக்கிறீர் உழக்கி லாது நாழியான வாறு போலும் ஊமைகாள் உழக்கு நாலு நாழியான வாறு போலும் உம்முளே வழக்கி லேயு ரைக்கிறீர் மனத்துள் ஈசன் மன்னுமே.

398

399