உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

இளங்குமரனார் தமிழ்வளம்

-

37

ஆடு கின்ற எம்பிரானை அங்கும் இங்கும் நின்றுநீர் தேடு கின்ற வீணர்காள் தெளிவ தொன்றை ஓர்கிலீர் நாடி நாடி உம்முளே நவின்று நோக்க வல்லிரேல் கூடொ ணாத தற்பரம் குவிந்து கூடல் ஆகுமே

சுற்றி ஐந்து கூடம்ஒன்று சொல்லி றந்த தோர்வெளி சத்தி யும்சி வமுமாகி நின்ற தன்மை ஓர்கிலீர்

.400

சத்தி யாவ தும்முடல் தயங்கு சீவன் உட்சிவம்

பித்தர் காள்அ றிந்துகொள்ளும் பிரான்இ ருந்த கோலமே.

401

அகார மான தம்பலம் அனாதி யான தம்பலம் உகார மான தம்பலம் உண்மை யான தம்பலம் மகார மான தம்பலம் வடிவ மான தம்பலம் சிகார மான தம்பலம் தெளிந்த தேசி வாயமே.

சக்க ரம்ப றந்ததோடி சக்க ரம்மேல் பலகையாய் செக்கி லாமல் எண்ணெய்போல் சிங்கு வாயு தேயுவும் உக்கி லேஒ ளிகலந்து துகங்க ளும்க லக்கமாய்

புக்கி லேபு குந்தபோது போன வாற தெங்ஙனே.

402

403

வளர்ந்தெ ழுந்த கொங்கைதன்னை மாய மென்றெ எண்ணிநீர் உளங்கொள் சீவ ராருடப் புடைமை யாகத் தேர்வீர்காள்

விளங்கு ஞானம் மேவியே மிக்கோர் சொல்லைக் கேட்பிரேல் களங்க மற்று நெஞ்சுளே கருத்து வந்து புக்குமே.

404

நாலு வேதம் ஓதுகின்ற ஞானம் ஒன்று அறிவிரோ நாலு சாமம் ஆகியே நவின்ற ஞான போதமாய் ஆலம் உண்ட கண்டனும் அயனும் அத்ந மாலுமாய்ச் சால உன்னி நெஞ்சுளே தரித்த தேசி வாயமே. சுற்றம் என்று சொல்வதும் சுருதி முடிவில் வைத்திடீர் அத்தன் நித்தம் ஆடியே அமர்ந்தி ருந்த தெவ்விடம் பத்தி முற்றி அன்பர்கள் பரத்தில் ஒன்று பாழது

பித்த ரேஇ தைத்கருதிப் பேச லாவ தெங்ஙனே.

எங்ங னேவி ளக்கதுக்குள் ஏற்ற வாறு நின்றுதான் எங்ங னேஎ ழுந்தருளி ஈசன் நேசர் என்பரேல்

அங்ங னேஇ ருந்தருளும் ஆதி யான தற்பரம்

405

406

சிங்கம் அண்மி யானைபோலத் திரிம லங்கள் அற்றவே.

407