உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

புக்கி ருந்த தும்முளே பூரி யிட்ட தோத்திரம் தொக்கு சட்சு சிங்குவை ஆக்கி ராணன் சூழ்ந்திடில் அக்க மணிந்து கொன்றைசூடி அம்ப லத்துள் ஆடுவார் மிக்க சோதி அன்புடன் விளம்பி டாது பின்னையே. பின்னெ ழுந்த மாங்கிசத்தைப் பேதை யர்கண் பற்றியே பின்பு மாங்கி சத்தினால் பேத மாய்கை பண்ணினால் துன்பு றும்வி னைகள்தான் சூழ்ந்தி டும்பின் என்றலோ அன்ப ராய்இ ருந்தபேர்கள் ஆறு நீந்தல் போல்விரே. விட்டி ருந்த தும்முளே விதன மற்றி ருக்கிறீர்

கட்டி வைத்த வாசல்மூன்று காட்சி யான வாசல்ஒன்று கட்டி வைத்த வாசலும் கதவு தாள்தி றந்துபோய்த் திட்டமான ஈசனைத் தெளிவு மாங்கி சத்துளே.

ஆகும் ஆகும் ஆகுமே அனாதி யான அப்பொருள் ஏகர் பாதம் நாடிநாடி ஏத்தி நிற்க வல்லிரேல்

101

424

425

426

பாகு சேரு மொழிஉமைக்குப் பால னாகி வாழலாம் வாகு டன்நீர் வன்னியை மருவி யேவ ருந்திடீர்.

427

உண்மை யான தொன்றதொன்றை உற்று நோக்கி உம்முளே

வண்மை யான வாசியுண்டு வாழ்த்தி ஏத்த வல்லிரேல்

தன்மை பெற்றி ருக்கலாம் தவமும் வந்து நேரிடும்

கன்ம தன்மம் ஆகும்ஈசர் காட்சி தானும் காணுமே.

பால னாக வேணும்என்று பத்தி முற்றும் என்பரே நாலு பாதம் உண்டதில் நனைந்தி ரண்ட டுத்ததால் மூல நாடி தன்னில்வன்னி மூட்டி அந்த நீருண

428

ஏல வார்கு ழலியோடே ஈசர் பாதம் எய்துமே.

429

எய்து நின்னை அன்பினால் இறைஞ்சி ஏத்த வல்லிரேல்

எய்தும் உண்மை தன்னிலே இறப்பி றப்ப கற்றிடும்

மைஇ லங்கு கண்ணிபங்கன் வாசி வானில் ஏறிமுன்

செய்த வல்வி னைகளும் சிதறும் அஃது திண்ணமே.

430

திண்ணம் என்று சேதிசொன்ன செவ்வி யோர்கள் கேண்மினோ

அண்ணல் அன்பு என்புருகி அறிந்து நோக்க லாயிடும்

மண்ணு மதிர விண்ணுமதிர வாசி யைந டத்திடில்

நண்ணி எங்கள் ஈசனும் நமது டலில்இ ருப்பனே.

431