உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

-

இளங்குமரனார் தமிழ்வளம் 378

அல்ல தில்லை என்றுதான் ஆவி யும்பொ ருளுடல் நல்ல ஈசர் தாள்இணைக்கு நாத னுக்கும் ஈந்திலை என்றும் என்னுள் நேசமும் வாசி யைவ ருந்தினால் தொல்லை யாம்வி னைவிடென்று தூர தூரம் ஆனதே. ஆன தேப தியதுயிர் அற்ற தேப சுபாசம் போன தேம லங்களும் புலன்க ளும்வி னைகளும் கான கத்தில் இட்டதீயில் காற்று வந்தடுத்தபோல் ஊன கத்தில் வாயு உன்னி ஒன்றி யேஉ லாவுமே.

உலாவும் உவ்வும் மவ்வுமாய் உதித்த டர்ந்து நின்றதும் உலாவி ஐம்பு லன்களும் ஒருத லத்தி ருந்திடும்

448

449

நிலாவும் அங்கு நேசமாகி நின்ற மிர்தம் உண்டுதாம்

குலாவும் எங்கள் ஈசனைக் குறித்து ணர்ந்து கும்பிடே.

450

கும்பி டும்க ருத்துளே குகனை ஐங்க ரனையும் நம்பி யேஇ டம்வலம் நமக்க ரித்து நாடிட எம்பி ரானும் அம்மையும் இருத்தி யேந டுவணைத் தும்பி போல வாசகம் தொடர்ந்து சோம்பி நீங்குமே.

நீங்கும் ஐம்பு லன்களும் நிறைந்த வல்வி னைகளும்

ஆங்கா ரம்மாம் ஆசையும் அருந்த டர்ந்த பாவமும்

451

ஓங்கா ரத்தின் உள்ளிருந்த ஒன்ப தொழிந்த தொன்றிலத்

தூங்கா ஈசர் சொற்படி துணிந்தி ருக்கச் சுத்தமே.

452

கருக்க லந்த காலமே கண்டு நின்ற காரணம்

உருக்க லந்த போதலோ உன்னை நான்உ ணர்ந்தது

விரிக்கில் என்ம றைக்கில்என் வினைக்கி சைந்த போதெலாம்

உருக்க லந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோ.

453

ஞான நூல்கள் தேடியே நவின்ற ஞான யோகிகாள்

ஞான மான சோதியை நாடி உள்அ றிகிலீர்

ஞானம் ஆகி நின்றதோர் நாத னைஅ றிந்தபின்

ஞானம் அல்ல தில்லைவேறு நாம்உ ரைத்த துண்மையே.

454

கருத்த ரிப்ப தற்குமுன் காயம் நின்ற தெவ்விடம்

உருத்த ரிப்ப தற்குமுன் உயிர்ப்பு நின்ற தெவ்விடம்

அருட்பொ திந்த சிந்தையில் மயக்கம் நின்ற தெவ்விடம் விருப்பு ணர்ந்த ஞானிகாள் விரித்து ரைக்க வேணுமே.

455