உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

இளங்குமரனார் தமிழ்வளம்

-

378

செய்து மாந்தரைக் கொல்பவர், அவர்க்கே அழிவைத் தேடிக் கொள்வார்; சோதிடர் சொல்வனவெல்லாம் கொடிய அறியாமை மயக்கத்தால் விளைவனவேயாம்; கண்ணேரில் காணும் முகக்குறி கட்குறிகளைக் காணாமல், பொய்யான குறிகளைக் காண்பது எதற்காகவோ?

நாயைப்போலச் சுற்றித் திரிந்து பிறர் நகைக்க இருப்ப வர்க்குப் பேயாட்டம் ஆடுதல் எதற்காகவோ? மந்திரங்களுக் கெல்லாம் மந்திரமாம் இறைவனை அறியார்க்கு மற்றைத் தந்திரங்களால் ஆவதென்ன? தர்க்கம் என்னும் பொருளில் பொய்யையே புகல்பவர்க்கு அழிவு மிக வருமாம்; வெட்ட வெளியே மெய்யாம் இறைவன் என்று இருப்பவர்க்கு மற்றை விளம்பரப்பாடுகள் எதற்காகவோ? மெய்யுணர்வால் மெய்ப் பொருளை அடையவல்ல அறிவாளர்க்கு உடலை நிலை பெறுத்தும் மருந்துகள் எதற்காகவோ? காணாமலே காணவல்ல திறங் கண்டவர்க்கு மற்றை வீணான ஆசைகள் எதற்காகவோ? வஞ்சமிலா வாய்மை வழிகண்டவர்க்குக் கவலை எதற்காகவோ? இறைமையின் அடியும் முடியும் கண்டவர்க்குப் பின் எதற்காகத் தருக்கம் வேண்டும்? உறங்காமல் உறங்கி உண்மை காண வல்லார்க்கு மற்றையோர் சான்று எதற்காகவோ? பிறரால் காணரிய மெய்யுணர்வுத் திறங்களில் நிலைபெற்றவர்க்கு மற்றவர் களைப் போல முணுமுணுக்கும் மந்திரங்கள் எதற்காகவோ? மெய்யாம் தவநெறியில் தலைப்பட்டவர்க்குப் பொய்யாம் வஞ்சம் எதற்காகவோ? அகக்கண் நோக்கால் சுழிமுனையில் சேர வல்லவர்க்கு மற்றைத் துயரங்கள் உண்டாமோ? முத்தமிழில் தோய்ந்த மெய்யறிவாளர்க்கு மற்றை உரப்பல் கனைத்தல் ஒலிகள் எதற்காகவோ? எட்டாத உயரத்தின் வெளியினைக் கண்டவர்க்கு மற்றை ஆசைகள் எதற்காகாவோ? நெருப்பால் நீறாகாமல் நீறாகிப் பரவெளி கண்டவர்க்குப் பற்றுமை எதற்காகவோ? இறவாமலே இறந்து மேனிலை யடைவார்க்குத் தனித்திருத்தல் எதற்காகவோ? விண்ணுலகில் களித்திருக்கும் வீடு பேற்றாளர்க்குச் சமய நூல்தானும் எதற்காகவோ? இன்பத்தில் மகிழும் இணையற்ற அறிவோடிருப்பவர்க்கு அறிவுநூல் தான் எதற்காகவோ? இறை இயல் திருநடத்தைக் கண்ணேரில் காணவல்லார்க்கு இலையும் பூவும் பழமும் எதற்காகவோ? பருவுடல் நுண்ணுடல் காரணவுடல் என்பவற்றின் உருக்கொண்ட மெய்யுணர்வாளிக்கு அறுகோண எந்திரம் எதற்காகவோ? எட்டுத்திக்கிலும் அசைந்தாடும் இறைவனுக்கு நடுவணை இட்டுவைத்தல் எதற்காகவோ? வீடுணர்ந்த