உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௩. நூலாய்வு - பொது.

குதம்பைச் சித்தர்பாடலில், எதுகையும் மோனையும் கொஞ்சிக் குலவுகின்றன; எளிமையில் இனிமை சொட்டு கின்றது; அரிய பொருள்களும் அவர்தம் சொல்லாட்சியின் எளிமைக்குள் அகப்பட்டு பளிச்சிடுகின்றன.குதம்பையை விளித்துச்சொல்லும் மடக்குத் தொடர் மனத்தை ஈர்த்துத் தன்வயமாக்குகின்றது. இசைத்துப் பாடுதற்கு ஏற்ற நிலைக் களத்தை அவரே அருமையாய் அமைத்துக் கொண்டுள்ளார். பின்னேயுள்ள 32 பாடல்களுக்கும் முன்னே உள்ள பாடல் களுக்கும் யாப்பு, சந்த அமைப்புகளில் வேறுபாடு தோன்ற வில்லை. எனினும், முற்பட்ட பாடல்கள், பிற்பட்ட ஒருவரால் பாடிச் சேர்த்திருக்க வேண்டும் என்னும் எண்ணம் உண்டா கின்றது.

பின் 32 பாடல்களில் காணப்படும் பொதுமை நோக்கு முற்பகுதிப் பாடல்களில் ஒருசிறிதே விலக்காகின்றது. பிற்பகுதி யில் வாராத சிலசொல் நடைகளும், சொற்களும் முற்பகுதியில் வருகின்றன. முற்பகுதியில் உள்ள இடச்சுட்டு பிற்பகுதியில் இடம் பெறவில்லை. முற்பகுதியில் நூலறிவு முகிழ்ப்பும், பிற்பகுதியில் பட்டறிவு முகிழ்ப்பும் புலப்படுகின்றன. இவற்றால் ஒருவர் பாடியன அல்ல என எண்ண நேர்கின்றது. ஆனால், பொதுமையில் சித்தர்வாக்கு என்று கொள்ளுதற்குத் தடையே தும் இல்லையாம். இவற்றின் விளக்கத்தை இந்நூலாய்வுப் பகுதியிலும், நூலிலும் கண்டு கொள்க.

"செத்துப்பிறக்கின்ற சிறுதெய்வம்" என்பது முன்னவர் ஆட்சி. அது "செத்துப் பிறக்கின்ற தேவைத் துதிப்போர்க்கு முத்திதான் இல்லை" என இந்நூல் சுட்டப்படுகின்றது (3).

“பற்றற நின்றானைப் பற்றறப் பற்றிடக்

கற்றார்க்கு முத்தி”

என்பது (52)

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு”

என்னும் குறள் வழியதாம்.