உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

135

“யானென தென்னும் இருவகைப் பற்றற்றோன் வானவன் ஆவான்”

என்பது,

"யானென தென்னும் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும்”

என்னும் குறள் வழியதாம்.

"ஆமைபோல் ஐந்தும் அடக்கித் திரிகின்ற ஊமைக்கு முத்தி”

என்பது (54)

66

'ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து”

என்னும் வள்ளுவ வகையது.

"இச்சை பிறப்பினை எய்துவிக்கும் என்றது நிச்சயமாகும்”

என்பதில் (114) உள்ள 'என்றது' என்பது, திருக்குறளைச் சுட்டியது ஆகலாம்! இஃது அவாவறுத்தலில் பெரிதும் வலியுறுத்தப்படும் செய்தியாம்.

"அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து”

என்பதையும்,

66

'ஆரா இயற்கை அவா நீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்”

என்பதையும் கருதுக.

இவ்வாறே வள்ளுவர் வாய்மொழிகள் இன்னும் பல சுட்டப்பெறுகின்றன. வள்ளுவர் கூறும் "கூடாவொழுக்கம் இவர்தம் பொய்த்தவ ஒழுக்கத்தைப் பழித்தலில் ஊடகமாக இயைந்துள்ள தெனலாம்.

“ஆசையை அறுத்தோர்க்கே ஆனந்தம் உண்டென்ற

ஓசையைக் கேட்டிலையோ?"

என்பதில் (116) வரும் 'ஓசை' திருமந்திர ஓசை ஆகலாம்.