உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

கள்ளங்கள்காமம் கொலைகள் கபடங்கள்

பள்ளத்தில் தள்ளுமடி

பள்ளத்தில் தள்ளுமடி.

பொருளாசை உள்ளவிப் பூமியில் உள்ளோருக்

கிருளாம் நரகமடி

157

குதம்பாய்

84

குதம்பாய்

இருளாம் நரகமடி.

கற்புள்ள மாதைக் சுலக்க நினைக்கினும்

வற்புள்ள பாவமடி

வற்புள்ள பாவமடி.

தாழாமல் உத்தமர் தம்மை இகழ்வது

கீழாம் நரகமடி

கீழாம் நரகமடி,

சுத்த பிரமத்தைத் தோத்திரம் செய்யார்க்கு

நித்த நரகமடி

நித்த நரகமடி.

எப்பாரும் போற்றும் இறையை நினையார்க்குத்

தப்பா நரகமடி

தப்பா நரகமடி.

பாழாகப் பூசைகள் பண்ணும் மடையர்க்கே

ஏழாம் நரகமடி

ஏழாம் நரகமடி.

காயமெடுத் தாதி கர்த்தரை எண்ணார்க்குத்

தீயாம் நரகமடி

தீயாம் நரகமடி.

அன்போடு நற்பத்தி ஆதிமேல் வையார்க்குத்

துன்பாம் நரகமடி

துன்பாம் நரகமடி.

7. பொய்த்தவ வொழுக்கத்தைப் பழித்தல்

செங்காவி பூண்டு தெருவில் அலைவோர்க்கு

எங்காகும் நல்வழியே

எங்காகும் நல்வழியே.

85

குதம்பாய்

86

குதம்பாய்

87

குதம்பாய்

88

குதம்பாய்

89

குதம்பாய்

90

குதம்பாய்

91

குதம்பாய்

92

குதம்பாய்

93