உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இளங்குமரனார் தமிழ்வளம் 37

10. ஆசையையொழித்தல்

இச்சை பிறப்பினை எய்விக்கும் என்றது

நிச்சயம் ஆகுமடி

நிச்சயம் ஆகுமடி.

வல்லமை யாகவே வாஞ்சை ஒழித்திட்டால்

நல்ல துறவாமடி

நல்ல துறவாமடி.

ஆசை யறுத்தோர்க்கே ஆனந்தம் உண்டென்ற

ஓசையைக் கேட்டிலையோ

குதம்பாய்

114

குதம்பாய்

115

குதம்பாய்

ஓசையைக் கேட்டிலையோ

116

தேக்கிய ஆசையைச் சீயென் றொறுத்தோரே

பாக்கிய வான்களடி

பாக்கிய வான்களடி.

இன்பங்கள் எய்திட இச்சையுறுவார்க்குத்

துன்பங்கள் உண்டாமடி

துன்பங்கள் உண்டாமடி.

துறவிகள் ஆசை துறந்து விடுவரேல்

பிறவிகள் இல்லையடி

11. தவநிலைகூறல்

பிறவிகள் இல்லையடி.

கொல்லா விரதம் குளிர்பசி நீக்குதல்

நல்ல விரதமடி

குதம்பாய்

117

குதம்பாய்

118

குதம்பாய்

119

குதம்பாய் 120

நல்ல விரதமடி.

தவநிலை யொன்றனைச் சாராத மாந்தர்கள்

அவநிலை ஆவாரடி

அவநிலை ஆவாரடி.

தவமதை எந்நாளும் சாதிக்க வல்லார்க்குச்

சிவமது கைவசமே

சிவமது கைவசமே.

குதம்பாய்

121

குதம்பாய்

122