உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர் (பொது நிலை)

சித்தர் என்பவர் சித்தத்தை வென்றவர் என்பர். சித்து வேலை செய்தலில் தேர்ந்தவர் என்றும் கூறுவர்.

எந்தக் கட்டும் இல்லாமல், எதைப்பற்றியும் எவரைப் பற்றியும் எள்ளவும் கவலைப்படாமல் அலைபவனைச் "சித்தன் போக்கு சிவன் போக்கு" எனத் திரிகிறான் என்பது வழக்கு. இப்பழமொழி,சித்தராவார் எவர் என்பதை வெளிப்ட விளக்கும். இதே கருத்தில் சிவன், சடையாண்டி, பேயாண்டி, பூச்சாண்டி, மலையாண்டி, முனியாண்டி, கோவணாண்டி என்றெல்லாம் கூறப்படுதலை ஒப்பிட்டுச் சித்தர் தோற்றம் பற்றியும் ஓரளவு அறியலாம்.

"சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன்” எனவரும் திருவாசகம் சித்தர் தன்மை இன்னதெனத் தெரிவிக்கும். இதனைச், 'சித்தம் சிவமாய் மலமூன்றும் செற்றவர், சுத்தம் சிவமாவர் தோயார் மலபந்தம், கத்தும் சிலுகும் கலகமும் கைகாணார்" என விளக்குவார் திருமூலர்.

மேலும், சித்தர் என்பார் இவர்; இவர் தன்மைகள் வை என்பதை ஒரு பாடலில் விளக்குகிறார் திருமூலர்.

“சித்தர் சிவத்தைக் கண்டவர்; சீருடன்

சுத்தாசுத் தத்துடன் தோய்ந்தும் தோயாதவர்;

முத்தர்அம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச் சத்தர் சதாசிவத் தன்மையர் தாமன்றோ”

என்பது அது.

அடுத்தவேளை உணவைப் பற்றி அக்கறைப்படுவது சித்தர் தன்மை இல்லை! அந்த வேளை உணவுக்கும் உண்கலம் கொள்ளலும், தேடிப்போய்ப் பெறுதலும் மேனிலைச் சித்தர் தன்மை இல்லை! கையில் ஓடு கொண்டிருப்பதும் கூட ஆசைக்கு