உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

-

இளங்குமரனார் தமிழ்வளம் 37

ஒரு காலத்தில் எவரோ ஒருவர் எண்ணிச் சொல்லிய எண்ணிக்கை! பின்னர் அப்படி அப்படியே வழிவழியாகப் போற்றி வரப் படுபவை.

பாம்பாட்டிச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், அகப்பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், கடுவெளிச்சித்தர், அழுகணிச் சித்தர் என ஆறு பேர் பெயர்களில் மட்டும் சித்தர் என்னும் பெயர் ஒட்டிக் கொண்டுள்ளது. பதினெண் சித்தர் பெரிய ஞானக் கோவையில் உள்ள பெயர்கள் இவை.

சித்த மருத்துவ நூல்களைக் கொண்டு ஆராய்ந்து சித்தர்கள் 18 பேர் என்று சொல்வார் உளர்.

சித்தர்களின் ஞானப் பாடல்களை வைத்துக் கொண்டு ஆராய்ந்து சித்தர்கள் 18 பேர் என்று சொல்வார் உளர். இவ்விருசார் பதினெண் சித்தர்களிலும் பதினெட்டு என்னும் எண்ணிக்கை உண்டே ஒழிய வெவ்வேறானவரே யாவர். மேலும் பதினெட்டு என்னும் எண்ணிக்கைக்கு இருமடங்கு மும்மடங்கு எண்ணிக்கையாளர் பெயர்களும் வரிசையில் உண்டு! ஆனால் பெயர் என்னவோ பதினெண் சித்தர் பாடல்கள் தாம்!

பதினெண் மேற்கணக்கில் மாற்றமில்லை; பதினெண் கீழ்க் கணக்கில் கூடச் சிக்கலிருந்தும் தெளிவாகிவிட்டது. பதினெண் புராணம் என்பதிலும் தெளிவு உண்டு. ஆனால் பதினெண் சித்தர் பெயரைத் திட்டப்படுத்துவதில் மட்டும் ஏன் தெளிவு பிறக்கவில்லை?

சித்தர்கள், புலமைத் தலைக்கோலைத் தூக்கிக் கொண்டு ஏடு எழுத்தாணி என்றே கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தவர்களைப் பற்றி அக்கறைப்படவில்லை! அடிமட்டத்தில் இருந்த மக்களுக்கும் கல்வியறிவறியா மக்களுக்கும் முன்னே நின்று பாடினர்! வெள்ளையாகப் பாடினர்! பொதுமக்கள் வழக்குச் சொற்களைக் கையாண்டு அவர்கள் கைக்கொண்ட இசையமைப்புகளில் எளிமையாகப் பாடினர். ஆய்ந்து பார்ப்பவர்க்கு அரும்பொருள் இருக்கவேண்டும் என்னும் உட்கிடை சித்தர்கள் உள்ளத்தில் ருந்தாலும், வெளிப்படையாகச் சொல்லி எளியவகையில் பொருள் கண்டு மகிழ்தற்கும் இடமாக்கி வைத்திருந்தனர். ஆகலின் பழுத்த புலமையே புலமை என்னும் அழுத்தமுடைய புலவர்களுக்குச் சித்தர் பாடல்கள் வெள்ளைப் பாடல்களாகத் தோன்றின! கல்லார் பாடல்களாகக் காணப்பட்டன! அதனால் அவற்றை அரவணைத்துக் கொள்ள அவர்கள் கைகளை

ஒரு