உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

7

நீட்டவில்லை! அரைகுறைப் படிப்பாளர்களும் போலித் துறவோர் களும், இசைபாடி இரந்து செல்லும் வாடிக்கையில் பாடி வந்தனர். அவற்றைத் தொகுத்து நூலாக்க விரும்பியவர்களும் சில்லறைக் கோவை, பெரிய கோவை என்று அகப்பட்டதை எல்லாம் அச்சாக்கி விட்டனர். ஒவ்வொரு பதிப்பிலும் புதுப்புதுச் சித்தர்கள்! புதுப்புதுப் பாடல்கள்! புதுப்புதுப் பாடங்கள்! புதிய புதிய புனைவுகள்! கூடிய அளவும் சித்தர்கள் பாடல்களுக்கு இதற்குமேல் சிதைவு செய்ய முடியாது என்ற அளவுக்குக் கொண்டு போய்விட்டனர்! அம்மட்டோ? இத்தனை ஏடுகளைத் தொகுத்து இத்தனை அறிஞர்கள் ஆராய்ந்து வெளியிட்டது என்றும் முத்திரை குத்தினர்! ஆனால் ஒரு பாடல் இருபாடலாகி இருக்கும், இரு பாடல் ஒரு பாடலாகியிருக்கும்; ஒரு பாடலின் ஓரடி மற்றொரு பாடலின் அடியாகியிருக்கும்; ஒரு பாடலுக்கு மிகையடி இருக்கும் இன்னொன்றில் சீர்விடுபாடு இருக்கும்; ஏன் அடிவிடுபாடும் அமையும்! ஆயினும் 'திருந்திய பதிப்பாகவே' இருந்தது! ஏன்? அவ்வளவு சிதைவுகள்.

B

இனிப் பொருள்பற்றியோ கேட்க வேண்டியது இல்லை. எல்லாம் புரிந்து கொள்ளும் பொருள்களா? சித்தர்கள் தாம் கண்ட பழக்கத்தில் கொண்ட மூச்சுப் பயிற்சி ஒடுக்கநிலை எழுச்சிநிைைல காட்சிநிலை விடுதலைத் தன்மை இன்னவற்றை யெல்லாம் விளக்குகின்றனர். செயன்முறைக் குருவின் வழியே செவ்விதின் அறிந்து கொள்ள வேண்டிய பொருளைச் சொல்லால் முடிக்க முடியுமோ? ஆதலால் "குருடும் குருடும் குருட்டாட்ட மாடி, குருடும் குருடும் குழிவிழுமாறே' என்பதாகவே அமைந்தது. இப்பொழுதும் அந்நிலைமைதான். ஏனெனில், வண்டி சென்ற தடத்தை அறியலாம். வண்டு சென்ற தடத்தை எவரே அறிவார்? படைப்போன் உணர்ந்ததைப் படிப்பாளியும் அப்படியே உணரும் நிலை உண்டாகவேண்டுமே! அல்லது உண்டாக்க வல்லாரேனும் வேண்டுமே! அதுகாறும் சித்தர் பாடல்கள் செம்மைப்பட செம்பொருள் புலப்பட- வெளிவருதற்கு இயலாதாம்! அந்நெறியில் தலைப்பட்ட திறம் வல்லார் திருநோக்கு, இதன் பால் வீழ்ந்து தெளிபொருள் விளக்கம் தருமாக!