உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவ வாக்கியர்

பதினெண் சித்தருள்

சித்தருள் ஒருவராக எண்ணப்படுபவர் சிவவாக்கியர். இவர் பாடலே சித்தர் பாடல் திரட்டில் முற்படி அமைக்கப் பெற்ற பேறும் உண்டு. சித்தர் பாடல்களுள் மிகுதியாக எண்ணிக்கை உடையது இவர் பாடல்களே. ஆனால் பதினெண் சித்தர் பெயர்களுள் இவர் பெயர் இடம் பெறாதுள்ளது.

சிவவாக்கியர் வரலாறு

இவரைப் பற்றி அபிதான சிந்தாமணி கூறும் செய்தி:

"இவர் வேதியர் குலத்திற் பிறந்து காசியாத்திரை சென்று இல்லறத்தில் ஆசை கொண்டு ஒரு ஞானியாகிய சக்கிலி, காசும் பேய்ச் சுரைக்காயும் கொடுக்கப் பெற்று அவன் உனக்கு எந்தப் பெண், மணலையும் இச்சுரைக்காயையும் சமைத்து இடுகின்றாளோ அவளே மனைவி என அவ்வாறு செய்த ஒரு குறப்பெண்ணை மணந்து இல்லறத்திருந்து மூங்கில் வெட்டுகையில் அது பொன் பொழிய நீத்து, ஒரு கீரையைப் பிடுங்குகையில் தன்னிலை நிற்கக் கொங்கணரால் திருந்தியவர். இவரைத் திருமழிசை ஆழ்வார் என்பர். இவர் தமிழில் தம் பெயரால் சிவவாக்கியம் என நூல் செய்தவர். இவர் வந்து பூமியில் பிறக்கையில் 'சிவ' என்று சொல்லிக் கொண்டு விழுந்தபடியால் இவர்க்கு இப்பெயர் இடப்பட்டது.'

தி.வி.சாம்பசிவம் பிள்ளை தமிழ் -ஆங்கில மருத்துவ அகராதியில் சிவவாக்கியரைப் பற்றியுள்ள செய்தி:

"சிவவாக்கியர், ஓர் சித்தன். இவர் மல்லிகையார்ச் சுனத்தின் சுனையருகே கானாறு மத்தியில் இருக்கும் வாய்க்காலின் மண்டபத்தில் நெடுநாளாகத் தங்கியிருந்து அநேக சித்தர்களைத் தமக்குச் சீடராகக் கொண்டு, அவர்களுக்குக் காயாதி கற்பங்களைப் போதித்து, தேகத்தைக் கற்றூணாகச் செய்யும் வழிகளையும் காட்டினவர். இவர் சில காலம் சமாதியில் இருந்து பிறகு பூமிக்கு வெளியில் வந்து அநேகம் பேர் துதித்துக் கொண்டாடும்படி அநேகவித சித்துக்கள் ஆடினதாகவும் இந்த மாதிரி மூன்று தடவை சமாதி புகுந்து வெளியில் வந்து தம்முடைய சீசவர்க்கத்