உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

9

தாருக்கு அற்புத அதிசயங்களைக் காண்பித்து, மற்றும் உலகத் தார்கள் யாவரும் இவரைப் போல் சித்தர் ஒருவர் உண்டோ எனக் கொண்டாடும் படி புகழ் பெற்று, பின் கடைசியாகச் சமாதியடைந்து தேகத்தை மறந்தார். இவர் தை மாதம் மகத்தில் இரண்டாங் காலத்தில் திருமூலர் கூட்டத்தாரில் செம்படவ கன்னியின் வயிற்றிற் பிறந்தவர். இவர் செந்தமிழ் கற்ற ஒரு கவிவாணர். இவர் ஒரு காலத்தில் கிருத்தவ மதத்தையும், பௌத்த மதத்தையும் சில காலம் தழுவி நின்று, சைவ சமயத்திற்கு விரோதமாகச் சில நூல்கள் பாடியுள்ளார். இப்பாடல்களுக்குத் தான் சிவவாக்கியம் என்று பெயர். அச்சமயம் மதுரையை ஆண்டு வந்த அரசனால் இவர் கண்டிக்கப்பட்டுமுள்ளார். இவர் சில காலமாக நாத்திக சம்வாதத்தை அனுசரித்து மறுபடியும் சித்த மதத்தைத் தழுவினவர்.

வரலாற்று ஆய்வு

இவ்விருவர் செய்திகளுக்கும் இடையேயுள்ள ஒப்புமை ஒன்றே ஒன்றாகும். அது 'சிவவாக்கியர் சிவவாக்கியம் என்பதை இயற்றினார்' என்பதேயாம். இரண்டற்கும் செய்திகள் ஒவ்வா திருத்தல் மட்டுமல்லாமல் உண்மைக்கும் ஒவ்வாதவையாம். சிவவாக்கியர் பாடலைப் படித்துப் பார்த்தவர்கள் அவற்றைக் கொண்டு சில செய்திகளை உருவாக்கி வைத்து அவற்றொடு சில ஒட்டுகளை இணைத்து மனம்போல் புனைந்துள்ளனர். தொகுப்பாளர் இருவரும் தாம்தாம் கேட்ட செய்திகளைக் கேட்டவாறு குறித்து அமைந்தனர்! சிவவாக்கியரின் உண்மை வரலாறு என்ன? அதனை அறியவும் முடியுமோ? சிவவாக்கியர் வரலாறு சிவவாக்கியமே! அதிலுள்ள செய்திகளின் உட்கிடையே அவர்தம் வாழ்வியல் நோக்கு! அவர் இவ்வுலகுக்கு விடுக்கும் செய்தியும், வைத்த வைப்பு நிதியுமாம்! பிறவெல்லாம் எண்ணத் தக்கன அல்லவாம். சிவவாக்கியத்தைக் கற்பார், இப்புனைவு களுக்குத் தக்க மூல வித்துகள் அதில் முடங்கிக் கிடப்பதைக் காண்பர். ஒரு பொருளை எவ்வழிக்குப் பயன்படுத்த வேண்டுமோ அவ்வழியை விடுத்து எதிரிடை வழிக்குப் பயன்படுத்திப் பாழ் செய்யும் பக்குவமில்லாப் பான்மைக்கு இப் புனைவுகள் எடுத்துக்

காட்டாம்.

சிவவாக்கியர் பாடல்களைக் கருதுவோம்;