உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

சிவவாக்கியர்

·

இளங்குமரனார் தமிழ்வளம் - 37

பெயர்

சிவவாக்கியர் என்னும் பெயர் வந்தவகை சிவவாக்கியத்தில் கிடைக்கின்றது. காப்புச் செய்யுளில், "சொல்லுவேன் சிவ வாக்கியம்" என்கிறார்."சிவவாக்கியம் சொல்பவர்க்கு" என்ன பெயர் வைப்பது?" என்று பாடலைத் திரட்டியவர் எண்ணியிருக் கிறார். 'சிவ வாக்கியர்' என்று சொல்லிவிட்டார்.

வள்ளலார் கூறவில்லையா? 'என் வாக்கன்று; இறைவன் வாக்கு' என்று! அப்படியே இவர் சொல்கிறார். 'சிவவாக்கியம் சொல்வேன்' என்று! "யான் சொல்லும் செய்திகள் என் செய்திகள் அல்ல; இறைவன் அருளும் செய்திகள்" என்று! இயற்றியவர் பெயர் தெரியவில்லை. காப்பிலே வந்த தொடர், பெயரைத் தந்து காப்புச் செய்தது.

சித்தரும் சிவவாக்கியமும்

"சித்தர் சிவத்தை நினைந்து நினைந்து சிவமான வராதலால் அவர் நரை திரை மூப்பு சாக்காடு முதலியவற்றைப் பெறுவதில்லை. அவர் என்றும் ஒரு பெற்றியராய்ச் சிவந்த மேனியராய் என்றும் இளைஞராய் அழகராய் வாழ்பவர்" என்று சித்தர் இலக்கணம் பற்றித் திரு.வி.க. கூறுவதை எண்ணிச் சிவவாக்கியர் நிலையை உணரலாம். சிவவாக்கியர் வழியே சித்தர் நிலையைக் காண்பது மிகவும் தக்கதாம்.

சித்தர்கள், உலகோர்போல் இரார்; உலகோர் சித்தர் இயலைப் புரியார். இவ்விடைவெளியால் சித்தர்கள் உலகோரால் தொல்லைகட்கு ஆட்படுவர்; ஆனால், தொல்லையை அவர் பொருளாக எண்ணவும் மாட்டார்; அறிவறிந்தோர் சித்தரைப் போற்றிப் புகழவும் செய்வர்; அதனையும் பொருட்டாக எண்ணார் சித்தர்.

"வீதி போகும் ஞானியை விரைந்து கல் எறியும்" காட்சியைச் சொல்கிறார் சிவவாக்கியர். அவர் கூறும் ஞானிகள் ‘சித்தரான ஞானிகள் என்பதையும் தெளிவிக்கிறார். சித்தர்கள், "போதிக்கப் பெறாமல் தம்முள்ளே போதம் வரப் பெற்றவர்" என்றும் மொழிகிறார். சித்தர்கள் சிந்தையடக்கி - நினைவும் அற்ற நிறை ஞானிகள் என்றும் விளக்குகிறார். கடல் கலங்குவதில்லை; சித்தர் உளமுங் கலங்குவதில்லை என உறுதிப்படுத்துகிறார்.

உலகவர் சித்தர்களை நோக்கும் முறையை யுரைத்து, அவர்கள் நோக்க வேண்டிய முறைகளையும் தெளிவாக்கிச் சித்தர் வழியால் உண்டாம் பயனையும் விளக்குகிறார் சிவவாக்கியர்