உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

சித்தர் என்றும் சிறியர் என்றும் அறியொ ணாத சீவர்காள்! சித்தர் இங்கி ருந்த போது பித்தர் என்று எண்ணுவீர்! சித்தர் இங்கி ருந்து மென்ன பித்தன் நாட்டி ருப்பரே!

அத்தன் நாடும் இந்த நாடும் அவர்க ளுக்கெ லாமொன்றே

66

“புத்த கங்க ளைச்சு மந்து பொய்க ளைப்பி தற்றுவீர்!

செத்தி டம்பி றந்தி டம்ம தெங்ஙன் என்றே யறிகிலீர் அத்தன் அனைய சித்தனை அறிந்து நோக்க வல்லிரேல் உத்த மத்துள் ஆய சோதி உணரும் போகம் ஆகுமே" என்பவை அவர் வாக்குகள்.

11

சித்தர் சிவவாக்கியர் சொல்கிறார்; "உலகவர், பெரியவர் எவர், சிறியவர் எவர் என்பதை அறிந்து கொள்ளவில்லையாம். சித்தர்கள் உலகில் வாழ்ந்து கொண்டிருந்த போது உலகவர் களால் பித்தர்கள் என்று பழிக்கவும் துயருறுத்தவும் பட்டனராம். சித்தர்கள் இங்கே இருந்தால்தான் என்ன? அவர்கள் இறைவர் திருநாட்டில் இருப்பதாக எண்ணுகின்றவராம்! அவர்களுக்கு இறைவன் நாடும் இந்நாடும் ஒப்பாகத் தோன்றுகின்றனவாம்! நிறைய நிறைய நீங்கள் படிக்கின்றீர்கள்! பொய்யும் புனைவும் புகல்கின்றீர்கள்! பிறந்து வந்த இடம் இறந்து செல்லும் இடம் எங்கே என்று அறியமாட்டீர்கள்! இறைவனாகவே இங்கே நடமாடும் சித்தனின் உண்மையை உணர்ந்து பார்ப்பீர் களேயானால் உள்ளொளி கூடிவரப் பெற்று இன்பநிலை இன்னதென் அறிந்து கொள்வீர்கள்" என்கிறார்.

உண்மைச் சித்தரை உலகவர் அறியாதிருந்தார் மட்டுமல்லர். போலிச் சித்தர்களைக் கண்டு போற்றிக் கொண்டும் திரிந்தனர். இதுவும் சிவவாக்கியர் உள்ளத்தில் உருத்தியது. அத்தகையரைப் பார்த்து வினாவுகின்றார்.

"சித்தம் ஏது சிந்தை ஏது சீவன் ஏது சித்தரே! சத்தி ஏது சம்பு ஏது சாதி பேத மற்றெது

முத்தி ஏது மூலம் ஏது மூல மந்தி ரம்மெது

வித்தி லாத வித்தி லேயீ தின்ன தென்றி யம்புமே'

தன்னை அறிதல்

அறிய வேண்டியவற்றையெல்லாம் அறிதல் 'அறிவறிதல்' எனப்படும். அறிவறிதலில் தலையாயதும், அறிதற்கு அருமை யானதும் தன்னை அறிதல் என்பதாம். மெய்ப்பொருள் வல்ல