உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

இளங்குமரனார் தமிழ்வளம் - 37

மேதக்கோர்கள், தாம் தம்மையறிந்த அருமையை வியந்து கூறியுள்ளனர்.மற்றையோரேல் அதைப்பற்றி என்ன கூறமுடியும்?

சித்தருள் தலையாய ஒருவர் திருமூலர். அவர்,

'என்னை அறிந்திலேன் இத்தனை காலமும்

என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்” (2366)

என்றும்

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்” (2355)

என்றும் கூறுகின்றார். மேலும்,

"தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள் பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள் சென்னியில் வைத்த சிவனரு ளாலே"

என்கிறார். சிவவாக்கியரும் இதனை வலியுறுத்துகிறார்.

“என்னி லேயி ருந்த ஒன்றை யான றிந்த தில்லையே என்னி லேயி ருந்த ஒன்றை யான றிந்து கொண்டபின் என்னி லேயிருந்த ஒன்றை யாவர் காண வல்லரே என்னி லேயி ருந்திருந்து யாது ணர்ந்து கொண்டெனே” என்பது அது.

வழிபாடு

சிவவாக்கியர் ஒருகாலத்தில் பற்பல மலர்களைப் பறித்தும் பறித்துத் தூவித் தூவி வழிபாடு செய்தாராம்! ஓயாமல் ஒழியாமல் மந்திரங்களைச் சொல்லிச் சொல்லி அயர்ந்தாராம்! குடம் குடமாக நீரள்ளிக் கொட்டி வழிபாடு செய்தாராம்! எண்ணிலாக் கோயில்களை நாடித் தேடி வழிபட்டாராம்! இறைவன் இருப்பிடம் ஈதென அறிந்த மெய்யறிவாளர் இயலைப் பின்னர் அறிந்து கொண்டாராம். கண்ட கோயில்களுக்கெல்லாம் சென்று கையெடுத்து வணங்குவதை விட்டு விட்டாராம்!

உள்ளத்துள் உறையும் இறை:

'கடவுள் இல்லவே இல்லை' என்னும் நம்பா மதத்தர் ஆய்விட்டாரா சிவவாக்கியர்? இல்லை! நம்பு மதத்தராகவே