உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

இளங்குமரனார் தமிழ்வளம்

ஆன்மா அந்தக்கரணமவற்றுள் ஒன்று அன்று :

37

'இதுவே ஆன்மா' 'இதுவே ஆன்மா' என்று பலவகை யாய் உரைத்த மெய்ப்பொருளாய்வாளர்க்கு, 'அது அன்று'; 'அது அன்று'; 'அவற்றின் வேறானது ஆன்மா' என்று மறுமொழி தந்த ஆசிரியர், அகக் கருவிகளாம் அந்தக் கரணமே ஆன்மா என்று கூறுவாரை மறுத்தற்கு, "அந்தக் கரணமவற்றின் ஒன்று அன்று" என்றார்.

மனம் நினைவு முனைப்பு அறிவு என்னும் அகக் கருவிகளை ஆன்மா தன் செயலுக்குக் கருவியாகக் கொண்டுள்ளதேயன்றி, அவற்றில் ஒன்றாகவோ, அவையெல்லாமுமாகவோ அது அமைந்து விடவில்லை என்றார். ஆன்மாவின் அறிகருவியாய் இயக்கமாவதே அகக் கருவிகள் ஆகலான் அவற்றை ஆன்மா வெனல் ஆகாதாம் என்றார்.

அவை சந்தித்தது ஆன்மா :

அகக் கருவிகளைக் கூடிநின்றதே ஆன்மாவாம். கூடுவதும் கூடிநின்ற இடமும் வேறாவது போலவும், கருவியும் கருவியுடை யானும் வேறாவது போலவும் அகக் கருவிகளும் ஆன்மாவும் வேறாம்.ஆயினும் அவை கூடிநிற்கும் குறியால் மயங்கி அகக் கருவிகளே ஆன்மா என்பார் உளர் எனத் தெளிவித்தார். ஆன்மா அகக் கருவிகளைச் சந்தித்தலை 'அஞ்சவைத்தைத்தே' என்பார்; அதன் விளக்கம் மேலே காண்பாம்.

ஆன்மா சகசமலத்து உணராது :

ஆன்மா, என்று உளதோ அன்றே மலமும் உளது. அதனை 'மலத்துளதாம்' என்று முதல் நூற்பாவிலேயே ஓதினார் ஆசிரியர். அம்மலத்தின் அல்லது மறைப்பின் இயல்பை உணர்த்துவாராய்ச் 'சகச மலம்' என்றார். சகசமலமாவது தொல்பழந் தொடர்பான அல்லது இயற்கையான மலமாம். இதனைக் களிம்பு, மறைப்பு, மாசு, அழுக்கு, மாயை, இருள் எனப் பல சொல்லால் சுட்டுவர். ஆன்மாவுக்கு இயல்பான மலத்தால், தானே அறிதல் இல்லாமல் அறிகருவிகளைத் துணையாகக் கொண்டு அறியும் என்று கூறினாராம். அறிகருவிகளோடு ஆன்மா சந்தித்துக் கடமை புரிதலால் ஒன்றனைப் பற்றி, சிந்தித்து, துணிந்து, அறிந்து கொள்கின்றதாம்.

இம்மலம் தொல்பழந் தொடர்பினது எனினும், மாந்தர்தம் நிலைக்கு ஏற்ப மூன்று நிலைகளையுடையதாம். மயக்கம், எழுச்சி, அமைதி (தாமசம், இராசதம், சத்துவம்) என்னும் முக்குண