உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞானபோதம்

211

நிலைப்பட்டார்க்குத் அமைகின்றது.

தக மலமும் மூன்று நிலைகளில்

மயக்க நிலையுடையவர்க்கு மறைப்பு மிகத் தடிப்பானது. விறகில் உள்ள தீயைப்போல இவர்களுக்கு உண்மைப் பொருள் மிக மிக வெளிப்படாததாக இருக்கும்.

எழுச்சி நிலையுடையவர்க்கு மறைப்பு தடிப்பானது. கண்ணாடியின் ஒளியை மறைத்துள்ள அழுக்குப்போல்வது அது. முயற்சியால் அம் மறைப்பை நீக்கி உண்மைப் பொருளைக் காணக்கூடும்.

அமைதி நிலையுடைவர்க்குரிய மறைப்பு மென்மையானது. புகையின் நடுவே தீ இருப்பதுபோல இருப்பது. எளிய முயற்சி யால் மறைப்பை நீக்கி மெய்ப்பொருள் காணலாம்.

பசையூட்டிய இரட்டு, இயல்பான இரட்டு, துகில் என்னும் மூவகைத் துணிகளையும் முறையே ஊடுருவிப் பார்க்கும் பார்வை போன்றது. மயக்கம், எழுச்சி, அமைதி என்னும் முக்குண நிலைப்பட்டாருக்கும் உள்ள மறைப்பு எனலாம்.

அமைச்சு அரசு ஏய்ப்ப நின்று அஞ்சவைத்தைந்து :

அகக்கருவிகளும் ஆன்மாவும் அமைச்சர்களும் அரசனும் போல நின்று ஐந்து படிநிலைகளையுடைதாம். அமைச்சு- அமைச்சர்; அமைச்சு என ஒருமையாற் சுட்டினும் அகக் கருவிகள் பலவாயினாற் போல அமைச்சர் பலராதல் கொள்ளல் முறையாம். அவ்வவ்வமைச்சரைத் தழுவியும் நெருங்கியும் சூழ்ந்தும் அறிபொருளை அறிந்துகொள்ளும் அரசனைப்போல அறி கருவிகளை அடுத்து நெருங்கி ஆன்மாவும் அறிவினைக் கொள்ளும் என்பதாம்.

அவத்தை என்பது 'நிலை' என்பதாம். அஞ்சு = ஐந்து. உயிர் நிற்கும் நிலைகள் ஐந்து; புருவநடு, கழுத்து, மார்பு, உந்தி, மூலம் என்பன. இவ்விடங்களில் உயிர் நிற்கும் நிலை முறையே, நனவு (சாக்கிரம்), கனவு (சொப்பனம்), துயில் (சுழுத்தி), உறக்கம் (துரியம்), பேருறக்கம் (துரியாதீதம்) என்பனவாம்.

புருவநடு முதல் மூலம்வரை உயிர் கீழே இயங்கும் இயக்கமும், மூலம்முதல் புருவநடுவரை மேலே இயங்கும் இயக்கமும் என உயிர் இயக்கம் இருவகையாம். இவை முறையே கீழால் நிலை, மேலால் நிலை எனப்படும்.