உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

இளங்குமரனார் தமிழ்வளம் - 37

இந்நூற்பாவால், "இறைவன் உயிர்களால் உணரப்படும் உருவினன் அல்லன்; எவராலும் உணரப்படாது இருப்பானும் அல்லன்; ஆதலால், அவன் அல்நிலை (அசத்து)ப் பொருளும் அல்லன்; இல்லானும் அல்லன்; உயிர்களால் அறியப்பட்டும் அறியப்படாதும் இருக்கும் இறைநிலை (சிவசத்து)ப் பொருளாளனாம் என்னும் கருத்தை ஆசிரியர் வலியுறுத்தினார்

என்க.