உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

-

இளங்குமரனார் தமிழ்வளம் 37

இனி, இவ்விரு வகை அறிவாலும் அடைய முடியா இறையை அடையும் வழிதான் யாதோ என்பார்க்கு மேலே வழி கூறுகிறார். ஞானக் கண்ணினில் சிந்தை நாடி:

நாடி என்பது நாடுக என்னும் பொருட்டது.ஞானக் கண்ணாவது அகக்கண்; அருட்கண்; "அருளின் வழிவந்த அகக்கண்ணால் அகத்துள்ளே ஆய்க' என்றார்.

ל

உயிரறிவாலும் உலக அறிவாலும் காண முடியாத இறையை, அகக்கண் கொண்டு காண்க என்று ஆசிரியர் அறிவுறுத்தினார்.

ஞானக் கண்ணாம் அகக்கண் ஆய்வு தலைப்பட்டபின் கண்ட காட்சியைப் பட்டினத்தார் பகர்வார் :

“தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின் மாயப் படலம் கீறித் தூய

ஞான நாட்டம் பெற்றபின் யானும்

நின்பெருந் தன்மையும் கண்டேன்; காண்டலும்

என்னையும் கண்டேன்; பிறரையும் கண்டேன்; நின்னிலை யனைத்தையும் கண்டேன்; என்னே!

நின்னைக் காணா மாந்தர்

தம்மையுங் காணாத் தன்னை யோரே”

என்று விளக்கினார்.

அகக்கண் கொண்டு ஆய்ந்த காலை நேர்வது என்ன என்பதை அடுத்துக் சுட்டுகிறார் ஆசிரியர்.

உராத் துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவ :

அகத்தைக் கண்கொண்டு ஆயும்போது பாசம் நீங்கும் என்பதை உவமையால் விளக்குகிறார் ஆசிரியர்.

'உரா' என்பது ஊரா என்பதன் முதற் குறுக்கம். 'துனை' என்பது விரைவு என்னும் பொருள்தரும் உரிச்சொல். 'தேர்' என்றது பேய்த்தேர் அல்லது கானல் நீர்; ஊர்தற்கு உதவாது விரைந்து செல்லும் கானல் தேர். 'உராத்துனைத் தேர்' எனப் பெற்றது. என்றது கானல் நீரை; கானல் நீர் எப்படி நெருங்கிய விடத்து இல்லையாய் அகல்கின்றதோ அவ்வாறு அகக்கண் கொண்டு நோக்குவார்க்கு மலநீக்கம் தானே நிகழுமாம் என்க. ஓருவுதல்-நீங்குதல்.

,