உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

இளங்குமரனார் தமிழ்வளம்-37

ஒருகுட நீர் வேண்டுமானாலும் என்ன பாடு? ஆனால், கொட்டும் அருவிக்கும், கொழிக்கும் ஆற்றுக்கும் நாம் கொடுக்கும் காசென்ன? பொழியும் மழைக்கு நாம் தரும் கூலியென்ன? இயற்கைதரும் குடநீருக்கு ஒரு காசு என்று கணக்கிட்டாலும் எத்தனை எத்தனை கோடியாகக் கட்டணம் செலுத்தவேண்டும்?

இப்படியே இயற்கை வழங்கும் கொடைகளை எண்ணிப் பார்க்கும் நெஞ்சம் இயற்கையின் மேலும், இயற்கையை ஆக்கிய இறைவன் மேலும் எத்தகு பற்றுவைக்க நேரும்? இது போலிப் பற்றுமையோ? பொய்மைப் பற்றுமையோ? இல்லையே!

நிலம் வழங்கிவரும் வளங்கள் எவை எவை? அதன் கொடைக்கும் விளைவுக்கும் எல்லையுண்டோ? தன்னுள் பொதிந்து வைத்துக்கொண்டு காலமெல்லாம் கனிந்து உதவக் கிடக்கும் கருவூலமாம் நிலக்கொடையை முற்றாகக் கண்டுவிட் டோமோ? "இலமென் றசைஇ இருப்பாரைக் காணின் நிலமென் னும் நல்லாள் நகும்" என்னும் பொய்யாமொழி பொய்யாம் நாளொன்றும் உண்டோ? நெடுங்கடல் வாரி வழங்கும் நிறை வளங்களுக்கு எல்லையும் கண்டதுண்டோ? அள்ளி அள்ளியும், அள்ளவும் தொலையா அமுதக் கலனன்றோ கடல்! அக் கடலுக்கும் அந்நிலத்திற்கும் வரியாக அரசுக்குச் செலுத்துவதை அன்றி இயற்கைக்குச் செலுத்தும் கட்டணம் என்ன? நல்லதன் நலனைக் கண்டு நயக்கும் வேளையில், நன்றியுணர்வேனும் வேண்டாவோ?

எத்தனை எத்தனை எழில்! எத்தனை எத்தனை மலர்! எத்தனை எத்தனை சுவை! எத்தனை எத்தனை இசை! எத்தனை எத்தனை இன்பக் கொள்கலம் இவ்வுலகம்! இவற்றைப் படைத்த முதல்வனை நன்றியோடு நினைவு கூர்தல் கடனே யன்றோ? பேரருள் பெருக்காகத் திகழும் இறைவன்மேல் பேரன்பு கொள்ளவுமோ கூடாது?

இவற்றையெல்லாம் நினைகூரச் செய்கிறார் மெய் கண்டார். அவ்வளவோ?

குழந்தை, நிலவைக் காணவேண்டும்; காக்கையைக் காணவேண்டும்- காட்டுகிறாள் தாய். விரலை நீட்டி-கையைக் காட்டிக் காட்டுகிறாள். முகத்தைத் திருப்பித் தொலைக்காட்சித் தேர்ச்சியாளன் தொலைக் காட்சிப் பொறியில் கண்டு காட்டுவது