உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞானபோதம்

243

போல் காட்டுகிறாள்! விழியைத் துலக்கி விளக்கிக் காட்டுகிறாள்! இப்படிக் காட்டுகிறானே இறைவன், ஆன்மாவுக்கு! அவ்வான்மா அறிவறியா நிலையில் அறியா தொழியினும், அறிவறிந்த போதேனும் அவன் காட்டிய திறத்தை அறிந்து 'காதலாகிக் கசிந்துருக வேண்டும்' அல்லவோ!

66

மூடமா-மடமா-ஆயின் என்ன? என்னால் இயன்ற மட்டில் அறிவுறுத்துவேன். வேண்டா வேண்டா என்று விட்டு விலகிப் போனாலும் விட்டுவிடாமல் விடாப்பிடியாய் அறிவுறுத்தியே தீர்வேன்" என்னும் அருளாசிரியன்போல, இறைவன் அறியாதன வெல்லாம் அறிவுறுத்திக் காட்டிய அருமையை நினைந்து நினைந்து 'காதலாகிக் கசிந்துருகுதல்' கட்டாயம் வேண்டும் அல்லவோ!

காணும் கண்ணுக்குக் காட்டும் உளம் :

கண்பார்த்தது என்கிறோம்; கண்ணோ பார்த்தது? ஆம்! கண்ணே பார்த்தது; அடுத்தும் வினா? கண்மட்டுமா பார்த்தது? இல்லை! கண்மட்டுமே பார்க்குமானால், உயிரிலா ஒருவனுக்கும் கண் உண்டுதானே? அவன் அக்கண்ணால் காணவேண்டும் அல்லவோ? காண முடியவில்லையே! அதனால் என்ன புரிகின்றது? கண்ணொடு சேர்ந்து உயிரும் காண்கிறது. உயிர் காட்டவே கண் காண்கிறது என்பது விளக்கமாம். இவ்விளக்கம் ஏற்பட்டால் மேலும் ஒரு விளக்கம் ஏற்படும் கண்டதைக் கொண்டுதானே காணாததை விளக்கவேண்டும்!

காண உள்ளத்தைக் கண்டு காட்டல் :

காணும் கண்ணுக்குக் காட்டும் உயிர் என்றால், அவ் வுயிரைக், கண்ணுக்குக் காட்டுமாறு செய்தது எது? அவ்வுயிரைக் காட்டுமாறு ஏவியதும், உடனிருந்து நடாத்தியதும் இறையே அன்றோ? இன்னும் சொன்னால் கண்ணுக்குக் காட்டுவதும் உடனிருந்து காண்பதும் உயிரறிவு என்பது மெய்யாவதுபோல், அவ்வுயிரறிவுக்குக் காட்டுவதும் உடனிருந்து காண்பதும் இறையறிவே அன்றோ! இறையறிவு உயிரறிவுக்கு உணர்த்த, உயிரறிவு கண்ணுக்குக் காட்டுகிறது என்றால் அவ்விறைமேல் எத்தகு பற்றுமை கொள்ளவேண்டும்?

அயரா அன்பு :

இறைவன்மேல் வைக்கவேண்டிய பற்றுமையை 'அன்பு' என்றார் மெய்கண்டார். எல்லாம் வல்ல அருளாளனுக்கு, உயிர்கள் அன்பேனும் - தொடர்புடையாரிடத்துக் காட்டும் அன்பேனும்