உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

இளங்குமரனார் தமிழ்வளம் - 37

காட்டவேண்டாவோ என்றார். அவ்வன்பும் மாறும் அன்பாய்- மறக்கும் அன்பாய் பட்டும் படாதும் தொட்டும் தொடாதும் அமைந்த அன்பாய் இருத்தல் கூடாதென, 'அயரா அன்பு' கொள்ளவேண்டும் என்றார்.

66

அன்பு செலுத்துதல் உயிரின் கடப்பாடு என்பதை வலி யுறுத்துவதற்கு மட்டுமன்றி, தன்னலத்தாலுங்கூட அன்பு செலுத்துதல் கட்டாயம் வேண்டும் என்பாராய்க் காண உள்ளத்தைக் கண்டு காட்டலின் அயரா அன்பு செலுத்துக" என்றார்.

வேள்வித்தீயில் உயிரிகளின் உடலை அறுத்து ஊனையும் குருதியையும் சொரிந்து நோற்பர் உண்டே! அந்நோன்பைக் காட்டிலும், தன் என்பையே விறகாக்கித், தன் இறைச்சியையே அறுத்து, கனலில் இட்டுப் பொன்போல் பொரியுமாறு ஒருவன் வறுத்தான் ஆயினும், என்ன? இறைவனைக் காண்பனோ? காணான்! அவன் 'அன்போடுருகி அகங்குழைவானே' யானால் இறைவனைக் கண்டடைவான் என்பார் திருமூலர். மூலர் வழிவரு மூலனாராம் மெய்கண்டார். அந்நுட்பம் அறிந்தே, 'அயரா அன்பின் அரன்கழல் செலுமே' என்றார்.

அசைவு காணும் அன்பால் நட்பையும் காதலையுமே நிலைப்படுத்த முடியாது என்றால், இறையடியையோ அசையும் அன்பால் அடைந்துவிட முடியும்?

நூற்பா வருமாறு:

காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல் காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்

அயரா அன்பின் அரன்கழல் செலுமே.

"காட்சியையுடைய கண்ணுக்கு ஒன்றைக் காட்டித், தானும் காண்கின்ற உயிரைப்போல, ஒன்றைக் காணுமாறு அவ்வுயிர்க்கு இறைவன் காட்டியும் கண்டும் நிற்றலால்,உயிர்,மறவாது போற்றும் அன்பால் இறைவன் திருவடியை அடையும்" என்பது இதன் பொருளாம்.

உயிர் அயரா அன்பால் இறையடி அடையும் என்று வழிகாட்டிய ஆசிரியர், அயரா அன்பு கைவரப்பெறும் வழியை அடுத்த நூற்பாவில் அருள்கிறார்.