உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னிரண்டாம் நூற்பா

இறைவன் திருவடி எத்தகையதெனச் சுட்டி, மலத்தின் தன்மை இன்னதெனக் காட்டி, பக்குவமுற்ற ஆதன் செயற்பாடு இன்னதென வரையறுத்து இந்நூற்பாவொடு நூலை நிறைவிக் கிறார் ஆசிரியர். மலநீக்கமுற்ற உயிர் இலங்கறிவு, வாலறிவு, விளங்கறிவு எனப்படும். மெய்யறிவுக்கு இ டமான இறைவனை ஒன்றுங்கால் அவ்வறிவின் சாயலாய் அன்றோ ஒன்றும்; 'பனிமலை சார்ந்த பொல்லாக் கருநிறக் காக்கையும் பொன்னிறமாம்' என்று புகல்வரே! இறையடித் தண்ணிழல் எய்திய ஆதன் எத்தகு தூய பளிங்கு வண்ணமுறுவன் என்பதை நூற்பாச் சொல்லமைதி, நடையமைதியாகிவற்றாலே ஆசிரியர் காணவைக்கும் திறன் எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் இன்பஞ் சுரப்பதாம்.

செம்மலர் நோன்தாள் :

இறைவன் திருவடியைச் சுட்டும் ஆசிரியர் 'செம்மலர் நோன்தாள்' என்றார். செந்தாமரை மலர் போன்றது செம்பொருட் பெருமான் திருவடி. அவனே சிவன்; சீவப்பன்; சேய்; சேயோன்; அரன்; அவன் முழுதுருவும் சிவப்பெனின் அடிமட்டும் வேறு நிறமாமோ? 'தாமரை புரையும் காமர் சேவடி' என்றாரே பெருந்தேவனார் (குறுந். கட). இவண் நிறத்தன்மை கருதியது மட்டுமன்று; குணத்தன்மையும் கொண்டது செம்மை!

पु என்பதும் மலர் என்பதும் 'மென்மை' என்னும் பொருள் தரும் சொற்கள். 'பூவாக இருக்கிறது' என்றும் 'மலரினும் மெல்லியது' என்றும் கூறுதல் அறிக. செம்மலர் ஆகிய இறைவன் திருவடி மென்மையானது என்றவர், அதற்கு வன்மையே இல்லையோ என்பார்க்கு அதன் வன்மையைச் சுட்டுவதற்கு 'நோன்தாள்' என்றார். நோன்மை வலிமை; தான் - அடி;

மென்மைக்கு மென்மை வன்மைக்கு வன்மை!

வன்மை மென்மை என்பவை முரண்பாடுகள். வன்மையில் மென்மையும், மென்மையும் வன்மையும் இருத்தல் அருமை. ஆனால் இல்லை என்று சொல்லிவிட முடியுமோ? பட்டவுடன்