உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

இளங்குமரனார் தமிழ்வளம்

-

37

துகள் துகளாக நொறுங்கிப்போகும் வயிரம், கண்ணாடியில் பட்டவுடன் அது நொறுங்கிப்போகின்றதே! மெலிதினும் மெலிய துகிலாடை வலிதினும் வலிதாக உழைக்கின்றதே! அஞ்சி நடுங்கும் மயில் படையையும் நடுங்கவைக்கும் பாம்பைக்கண்டு அஞ்சாது தாக்கி அதனை அஞ்சச் செய்கின்றதே! வேலை செய்தற்கு மென்மையாம் தேக்கு எத்தகு வன்மையானது! மென்மையில் அமைந்த வன்மை இவையல்லவோ?

இனி இறைவன் படைப்பு எல்லாம் 'அவன் அவள் அது' என்னும் முச்சுட்டால் உரைத்து முடிவன அல்லவோ?

'அவன்' வன்மையும், 'அவள்' மென்மையும் இணைந்து விளங்கும் ஈரடிகள், ஒன்று வன்மையாய் ஒன்று மென்மையாய்ச் சுட்டல் தகவே அன்றோ! 'பெண்ணுரு ஒருதிறன்' ஆகிய பெம்மான் திருவடியல்லவோ அவை? ஆதலால் மென்மையும் வன்மையும் அருளி உய்ப்பன எனலாமே! இரண்டு ஆற்றலும் இல்லாமல் உலகம் இல்லையே!

இனி, அவன் என நூலைத் தொடங்கிய ஆசிரியர், நூலின் இறுதியில் அவளைச் சுட்டுமுகத்தான் செம்மலர் மெல்லடியைச் சுட்டி, அடுத்து நோன்தாளைக் குறித்தாரோ? அவ்வாறாயின் மிகத் தகவேயன்றோ!

சேரல் ஒட்டா அம்மலம் கழீஇ :

.

இறைவன் 'செம்மலர்' நோன்தாளை ஆதன் சேரல் ஒட்டாது செய்வது எது? மலம்! மலம் என்பதற்கு 'அம்' என்னும் அடைமொழி தருவானேன்? அழகிய மலம் என்பதற்கோ? ல்லை-அம் என்னும் சுட்டு, அதன் தொல்பழந் தொடர்பு குறித்து வந்தது.

ஒரு கலத்தில் ஒரு பொருள் இருக்கிறது. அப்பொருள் கலத்தோடு ஒட்டிக் கலத்தோடு கலமாக இருந்த பொருள். அதனை முற்றாக எடுத்தபின்னும் கலத்தில் சிறிது சிறிது துகள் ஒட்டிக் கொண்டிருக்கும் அல்லவோ! ஒட்டிக்கொண்டிருப் பதைத் துடைத்து எடுத்தாலும் நுண்துகளும், மணமும் இல்லாமல் ஒழியாவே? பின்னும் கலத்தை நீர்விட்டு நன்றாகக் கழுவுதல் வேண்டும்! கழுவுதலும் ஒருமுறை கழுவுதல் போதாது; பல்கால் கழுவிக் கழுவித் தூய்மைபடுத்துதல் வேண்டும். அவ்வாறு கழுவாக்கால் கலத்தூய்மை கெடும். அவ்வாறே, உயிர்க்கு மலம் அகன்ற காலையும் அதன் எச்சமும் இல்லாமல் பல்கால் பன்முக முயற்சியால் மலம் இருந்த இடமும் தடமும் இல்லாவண்ணம்