உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

இளங்குமரனார் தமிழ்வளம் -37

அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே! அன்புரு வாம்பர சிவமே!

என்பது அது.

கழுவுதலும் பல்கால் வேண்டும் என்ற ஆசிரியர், அன்ப ரொடு மருவுதலும் இடையீடின்றி வேண்டும் என்பாராய் 'மரீஇ' என அளபெடுத்தோதினார். கழுவுதல் 'கழீஇ' ஆயது; மருவுதல் 'மரீஇ' ஆயது!

அன்பர், அன்பரொடு மருவுதல் ஏன்? இனம் இனத்தோடு சேர்ந்திருத்தல் இயல்பே அல்லவோ?சிற்றினம் அஞ்சும் பெருமை" என்ற வள்ளுவர்தாமே, "பெரியாரைத் துணைக் கோடல்" அருளினார்.

உணர்வால் ஒன்றுபடுதலுடன், உடையாலும் நடையா லும் ஒருமை காட்டுதல் உலகியல்! படைத்துறைத்கெனத் தனியுடை, தனிநடை! காவல்துறைக்கெனத் தனியுடை, தனிநடை! இவற்றைக் காணும் நாம், மெய்கண்டார் 'அன்பரொடு மரீஇ' என்பதன் பொருளை அறிவதுடன், மேலே சொல்லப்புகும் பொருளருமையையும் அறிந்துகொள்ளக்கூடும். மாலற நேயம் மலிந்தவர் வேடமும்

=

மால் = மயக்கம்; அற நீங்க; நேயம் மலிந்தவர் இறைபணியில் தோய்ந்த துறவோர்; வேடம் = திருக்கோலம்.

||

=

அசைவு என்பது சிறிதேனும் இல்லாமல் இறைபணியில் தோய்ந்த அடியார் திருவேடமும் என்பது இதன் பொருள்.

வேடத்திலே 'தவ' வேடமும் உண்டு; 'அவ' வேடமும் உண்டு. ஆயினும் அடியார் திறம் வேடத்தை மதித்து, அவ் வேடத்திற்கு உரியவன் உள்ளீட்டைப்பற்றிக் கருதாமல், றைமை அவனிடத்துத் தங்கியுளதாகக் கொண்டு வழிபடுவதே யாம் என்றார்.

'மெய்ப்பொருள் வேந்தன்' வரலாற்றுச் செய்தி இது: பொய்த் தவ வேடத்தான் புக்கபோதும், பொருந்தாச் செயல் செய்தபோதும், தவவேடமெனத் தாம் எண்ணிய எண்ணம் திறம்பாமல் வெற்றி கொண்டவர் அவர்! ஆட்சித் திறத்திலே வெற்றி கண்ட அவர், இறைவன் அடிமைத் திறத்திலும் வெற்றி கண்டவர்.

'கூடா ஒழுக்கம்' என்னும் அதிகாரத்திலே துறவோர் போலி வேடங்காட்டிச் செய்யும் புன்மைகளைக் கண்டித்தார்