உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

இளங்குமரனார் தமிழ்வளம்

37 ஓ

இதுவரை சிவவாக்கியர் வாக்குக் கொண்டு அவர் தம்மை உணர்ந்த வகையையும், தலைவனை உணர்ந்த வகையையும், அவர் கடைப்பிடித்த வழிபாட்டு முறையையும் அறிந்தோம். இனி அவர் வாக்காலேயே அவர் குறிப்பிட்டுரைக்கும் உடல் நல, உயிர் நல, உலக நலக் கருத்துகளை அறியலாம்.

சிவவாக்கியர் வேண்டுதல்

வேண்டுதல் வேண்டாமை அல்லது விருப்பு வெறுப்பு ல்லாதவன் இறைவன். மாந்தருக்கு விருப்பு வெறுப்பு உண்டு. அவை உண்டு எனினும் அவரவர் வளர்ந்த நிலைக்கு ஏற்ப அவ் விருப்பு வெறுப்புகள் அமைகின்றன. அவ்வகையில் சிவவாக்கியர் மிக வளர்ந்தவர்; உலகவர் பொதுவாக விரும்பும் விருப்பையும் வெறுப்பையும் கடந்தவர். அவர் வேண்டுதல், தெளிந்த சித்தர் ஒருவரின் வேண்டுதல் எத்தகையதாக இருக்கும் என்பதைக் காட்டுகின்றது.

"ஆடு காட்டி வேங்கையை அகப்படுத்து மாறு போல் மாடு காட்டி என்னைநீ மதிம யக்கல் ஆகுமோ?

கோடு காட்டி யானையைக் கொன்று ரித்த கொற்றவா வீடு காட்டி என்னைநீ வெளிப்படுத்த வேண்டுமே."

"செருக்கால் எவரையும் சீரழித்து வந்த யானை முக அசுரன் ஒருவனைக் கொன்று, அவன் தோலைப் போர்வையாகப் போர்த்துக் கொண்ட இறைவனே, வேட்டையாடுவார். ஆட்டைக் காட்டிப் புலியை வரச் செய்து அகப்படுத்திக் கொள்வதுபோல், என்னை மாடு - செல்வம் முதலியவற்றைக் காட்டி மயங்கச் செய்வது சரியாமோ? எனக்கு நீ விடுதலை அருள வேண்டும்; இவ்வுலகியலில் இருந்து அப்பால்படுத்தி வைக்க வேண்டும்” என்று இப்பாடலில் வேண்டுகின்றார்.

உடலியல்

-

இவ்வேண்டுதலுக்கு அடிப்படை மெய்யுணர்வேயாம். அம்மெய்யுணர்வால் உடலியல் பற்றிக் கருத்துச் செலுத்து

கின்றார்.

"மண்பாண்டம் கவிழ்ந்தால், அதனைக் கவிழா வகையில் போற்றி அடுக்கி வைப்பார்கள். வெண்கலப்பாண்டங்கள் கவிழ்ந்தால், அவை வேண்டத் தக்கவை ஆயினவே என்று பேணி வைத்துக் கொள்வார். ஆனால், உடல் என்னும் இக்கலம் கவிழ்ந்துபோனால் நாறும் என்று எடுத்துச் சென்று மண்ணுள்