உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இளங்குமரனார் தமிழ்வளம்-37 37

"பருத்தி பட்ட பன்னிரண்டு பாடு தானும் படுவரே' "பருத்தி பட்ட பாடுதான் பன்னி ரண்டும் பட்டதே” என்பதாம்.

பருத்தி பட்ட பாடுகள் பன்னிரண்டு என்று எவற்றை எண்ணிச் சொன்னாரோ சிவவாக்கியர். ஆனால் "பஞ்சுபடாப் பாடு என்பாடு என வருந்தியுரைப்பார் மிகப்பலர்! பஞ்சுக்கு மூலந்தானே பருத்தி? அதன் பாடுகளை எண்ணலாம்!

-

பருத்தி எடுத்தல் - காயப்போடல் கொத்தை கழித்தல் மணையிலிட்டு அரைத்தல் - பஞ்சு கொட்டல் - தக்கையாக்கல் நூற்றல் - கண்டு சுற்றல் - கழியாக்கல் - பாவாற்றல் - நெய்தல் சலவை செய்தல் எனப் பன்னிரண்டு பாடுகளை எண்ணலாம்! எத்தனை சவட்டு சவட்டப்படுகின்றது பருத்தி! அதனால் தானே 'சவளி' எனப் பெயர்பெற்றது துணி சவட்டப்படும் பருத்தி போலச் சவட்டப்படுகிறது உடம்பு என்று சொல்லும் சிவவாக்கியர், உடலைப் பற்றிய தெளிவோடு தானே உரைத்தார்.

பாலனாகி வாழ்தல்

உடலின் உண்மை நிலையை உணர்ந்தறிந்த சிவவாக்கியர் உடலை இளமையாய் வைத்திருக்க வழிவகையும் கூறியுள்ளார். உடலைப் போற்றவேண்டும் என்றால் எப்படிப் போற்றவேண்டும் என்று எவரே வினவார்? சிவவாக்கியர் ஆணையிட்டுச் சொல்கிறார்:

"உருத்த ரித்த நாடியில் ஒடுங்கு கின்ற வாயுவைக் கருத்தி னாலி ருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல் விருத்தர் தாமும் பாலராவர் மேனி யுஞ்சி வந்திடும் அருள்த ரித்த நாதர்பாதம் அம்மை பாதம் உண்மையே”

"மூலநாடி தன்னிலே முளைத்தெ ழுந்த சோதியை நாலுநாழி உம்முளே நாடி யேயி ருந்தபின்

66

பால னாகி வாழலாம் பரப்பி ரம்மம் ஆகலாம்

ஆலம் உண்ட கண்டராணை அம்மை ஆணை உண்மையே’

“மூல மாம்கு ளத்திலே முளைத்தெ ழுந்த கோரையைக்

கால மேஎ ழுந்திருந்து நாலு கட்ட றுப்பிரேல்

பால னாகி வாழலாம் பரப்பி ரம்மம் ஆகலாம்

ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே”

இப்படியே பல பாடல்களைச் சொல்கிறார்.

-