உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

17

மூச்சு நிலை

மூலநாடியின் மூச்சை உச்சிக்கு ஏற்றும் திறம் பெற்றால் முதியரும் இளையராகலாம் என்றும், இளையராகி வாழ்வதுடன் தெய்வநிலையும் எய்தலாம் என்றும் குறிப்பிடுகிறார். ஓகநெறிப் பயிற்சியால் இது கைகூடும் என்பதைத், தாம் தம் பட்டறிவால் கண்டவாறு உரைக்கின்றார். அவ்வழி, கண்டு காட்டுவார் வழி ஆகலின் விண்டு காட்டுதல் வீணுரை யேயாம்! விளங்காததும் விளக்கமில்லாததுமாகிய உரையுமாம்!

“சங்கி ரண்டு தாரை ஒன்று சன்னல்பின்னல் ஆகையால் மங்கி மாளு தேஉலகில் மானி டங்கள் எத்தனை? சங்கி ரண்டை யுந்தவிர்த்துத் தாரை ஊத வல்லிரேல், கொங்கை மங்கை பங்கரோடு கூடி வாழ்தல் ஆகுமே"

என்பதுபோல 'வளநிலை' (மூச்சு)ப் பயிற்சிகளை இயல்பான ஓட்டத்தில் எண்ணற்ற பாடல்களில் பாடியுள்ளார் சிவவாக்கியர். ஓகநெறி வல்லார் உணர்ந்து கொள்ளும் அருமையுடையவை! நாம் "சொல்லால் முழக்கிலோ சுகமில்லை" என அமைதல் சாலும்! காலனுக்குக் கலங்காமை

இளமையாய் இருக்க வகைகண்ட சித்தர் காலனுக்கு அஞ்சுவரோ?

“காலன் என்று சொல்லுவீர் கனவிலும் அதில்லையே”

என்கிறார்! அவர் கனவிலும் கூட, காலனுக்கு அஞ்சாமை குறித்த குறிப்பு இது. ஆனால் பொதுமக்கள் எப்படி இருக்கின்றனர்? அஞ்சி அஞ்சிச் சாகின்றனரே! சாவு வந்திடும் என்னும் அச்சத்தால், தாமே விரைந்து சாவை வரவேற்று விடுகின்றனரே! இதனைக் கண்டு இரங்குகின்றார் சிவவாக்கியர்:

"நீளமான வீடுகளைக் கட்டுகிறீர்கள்; நெடிய கதவுகளை அமைத்துப் பூட்டுகிறீர்கள்; இவையெல்லாம் எதற்காக? மகிழ்வோடு வாழவேண்டும் என்பதற்காகத் தானே! ஆனால் நடப்பதென்ன? காலன் ஓலை வரும்போது என்ன ஆகின்றது? உமக்கு, அந்த நீள வீடும், நெடுங்கதவும் காவல் செய்தனவோ? அப்பாலுக்கு அப்பாலாய் உம்மை வெளியேற்றி விட்டனவே அவை! இறைவனறிய உண்மையில்லையா இது?" என்கிறார்.

"காலன் எப்பொழுது இல்லை! காலமெல்லாம் இருப்பவன் ஆதலால்தானே அவன் காலன்? அவனுக்குக் காலை என்ன?