உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

-

இளங்குமரனார் தமிழ்வளம் 37

மாலையென்ன? அவன் கலந்தே உள்ளான்! ஆம்; உம் காலமெல் லாம் கலந்தே உள்ளான்! காலை மாலை அற்ற வகையில் நீங்கள் கருத்தில் ஒடுங்கி விட்டால் என்ன ஆகும்? காலை மாலை ஆகிநின்ற காலன் இல்லை இல்லையே என விளக்குகிறார். பேருறக்கம்

"உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு"

என்றார் வள்ளுவர். இறப்பை உறக்கம் (நித்திரை) என்றே சொல்லி விடுகிறார் சிவவாக்கியர். இறந்தபின் ஆகும் நிலைமை என்ன என்பதையும் சொல்கிறார் அவர்:

(6

'ஓதி வைத்த நூல்களும் உணர்ந்து கற்ற கல்வியும் மாது மக்கள் சுற்றமும் மறக்க வந்த நித்திரை

ஏது புக்கொ ளித்ததோ? எங்கு மாகி நின்றதோ? சோதி புக்கோ ளித்தமாயம் சொல்ல டாசு வாமியே"

என்பது அது.

இறந்தவர் எழும்பார்

இறவாநிலை என்பது புகழுடலையே யன்றி இவ்வுடல் வாழ்வைக் குறித்ததன்று. என்றும் இறவாமல் இருக்கலாம் என்பது அறியார் உரை. பிறப்பதற் கெல்லாம் இறப்பு உண்டு; இறப்பது இல்லை என மகிழ்ந்து "உங்கள் சொத்து எங்கள் சொத்து நலம் பொலம்" எனத் திரியலாம். ஆடிப்பாடி மகிழலாம்; ஆனால் முடிவு என்ன? உடல் அழிந்தபோது உயிர் எப்படி உறவாடிக் கொண்டிருக்கும்? என்று வினவுகிறார்.

"பிரிந்துபோன உயிர் மீண்டும் உடலுள் புகுவது உண்டு", என்னும் ஒரு கருத்தும் உலகில் உண்டு. ஆதலால் உடலை எரித்தல் கூடாது என்பதும் உண்டு. இக்கருத்தை மறுக்கிறார் சிவவாக்கியர். “கறந்த பால் காம்பில் மீண்டும் புகாது;

கடைந்தெடுத்த வெண்ணெய் மீண்டும் மோரில் புகாது;

உடைந்து போன சங்கில் ஓசை எழாது;

விரந்து வீழ்ந்த பூவும், உதிர்ந்த காயும் மீண்டும்

மரத்தில் புகா; அவ்வாறே பிரிந்துபோன உயிர்களும் உடல்களில் புகமாட்டா”

என்று சொல்லி,