உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

19

66

"இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே"

என முடிக்கிறார்.

பிறப்பொழிந்தார்

இறந்தவர் எழுந்திரார் என்ற சிவவாக்கியர், எவருக்குப்

பிறவி இல்லை என்பதையும் தெளிவிக்கிறார்:

"அல்லல் வாசல் ஒன்பதும் அடைத்த டைந்த வாசலும் சொல்லும் வாசல் ஓரைந்தும் சொம்மி விம்மி நின்றது நல்ல வாச லைத்திறந்து ஞான வாசல் ஊடுபோய் எல்லை வாசல் கண்டவர் இனிப்பி றப்ப தில்லையே'

55

உயிரியல், உடலியல், இறையியல், உலகியல் என்பவை யெல்லாம் சித்தர்கள் ஆய்ந்தவையே. அவர்கள் உலகியலில் ஒன்றாமல் இருந்தும் ஒன்றியவர்கள். அறியாத செய்திகளையும் நுண்மையாக அறிந்து வழிகாட்டுகின்றனர். மூலத்தை நாடி மூச்சை அவிழ்க்கின்றனர்.

பெண் ஆண் ஒப்பு

ஆண் பெண் பற்றிய உயர்வு தாழ்வு, பெருமை சிறுமை உலகில் பேசப்படுகின்றன. அதனால் 'பெண்ணின் பெருமை' பேசி நிலைநாட்ட வேண்டிய கடப்பாடும் சான்றோர்களுக்கு உண்டாயிற்று. தந்தையையும் தாயையும் உயர்வு தாழ்வாகப் பார்க்கும் கொடுமை தலையாய கொடுமை அல்லவோ! தெய்வ உருவாகத் திகழும் தாயைத் தாழ்வாக நினைப்பது தடிப்பேயன்றி வேறொன்றாமோ? உலகெல்லாம் இருக்கும் பெண்கள் நிலைமையை நினைத்துத் தானே.

"பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டின்

மண்ணடிமை தீராது”

என்று பாவேந்தர் பகர்ந்தார். இதோ சிவவாக்கியர் சொல்கிறார்; இறைவனை நோக்கி உலகத்தார் அறிய அறை கூவுகின்றார்:

அண்ண லேஅ நாதியே அநாதி முன்அ நாதியே பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்ப தற்கு முன்னெலாம் கண்ணி லாணின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே மண்ணு ளோரும் விண்ணுளோரும் வந்த வாறும் எங்ஙனே?