உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

-

இளங்குமரனார் தமிழ்வளம் 37

பிறப்பதற்கு முன்னே உயிர்நிலையில் பெண் ஆண் என என்ன வேற்றுமை கண்டார்? அவ்வேற்றுமை காண மாட்டாதார் பின்னே வேற்றுமை காட்டுதற்கு என்ன உண்டு? எனச் சிந்திக்க வைக்கிறார் சித்தர். இன்று புதுமைப் பெண்ணாக வந்து பேசும் பேச்சைச் சித்தர் அன்றே பேசுகின்றார்.

உலகோரைப் பற்றிச் சித்தர் அறியாமலும் போய்விட வில்லை. அவர்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக முறைகெட்ட ஒன்றைச் சொல்ல முடியுமா? ஏற்க முடியுமா?

வாய் திறக்க அஞ்சல்

பொய்யான ஒன்றைச் சொன்னால் அதுவே மெய்யென்று பொய்யர்கள் கொண்டாடுகின்றனர். சரி. மெய்யராவது இது மெய்யானது என்று மெய்யைப் போற்றுகின்றனரா! அவர்களிடம் அந்தத் துணிவு இல்லை. ஆதலால் இறைவனே, "வையத்தில் உண்மை தன்னை வாய் திறக்க அஞ்சினேன்; நைய வைத்த தென்கொலோ' என்கிறார்.

சமயப் பொதுமை

தென்னாட்டில் சிவனியம் (சைவம்) மாலியம் (வைணவம்) என்னும் இரு சமயங்களும் தொன்மையானவை. இம் மண்ணிலேயே தோன்றிச் செழித்தவை; சிவனடியார்களாகிய நாயன்மார்கள் முதலியவர்களாலும், மாலடியார்களாகிய ஆழ்வார்கள் முதலியவர்களாலும் போற்றி வளர்க்கப் பெற்றவை. ஒரு மரத்தின் இரு கவடுகள் போன்றவை இச் சமயங்கள் ச் என்பதைப் பெருநிலை அடியார்கள் ஏற்றுக்கொண்டிருந்தாலும், மற்றையோர்களால் ஒப்பு மதிக்க மாட்டாமல் பகையும் காழ்ப்பும் வன்பும் துன்பும் வழக்கும் எதிர் வழக்குமாக அமைந்த சீர்கேடுகள் உண்டு; அது முற்றா இன்றும் தீர்ந்துவிட்டது என்பதற்கும் இல்லை! மாலியத்திலேயே தென்கலை போராட்டமும் முடிந்த பாடில்லை என்னும் போது 'இரு சமயமும் ஒரு சமயமே' என்னும் பொதுநிலை எப்படி உண்டாக முடியும்?

வடகலைப்

ரு

சமயச் சால்புணர்ந்த பெருமக்கள் இரு சமயப் பொதுமையை வலியுறுத்தி வந்தனர். அவ்வப்போது வெள்ளப் பெருக்குப்போல் மோதல்கள் கிளம்பும் - ஒருவகையான தீர்வு காணப்படும்! இந்நிலையில்தான் "அரியும்சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயிலே மண்ணு" எனப் பொதுமக்கள் வாய்மொழி கிளர்ந்தது. சித்தர்கள் 'சிவன் மால்' என வேறுபாடற நின்ற