உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

சிவவாக்கியர்

-

-

21

தன்மையர். உருவங்கடந்த பெயர் கடந்த வழிபாட்டு முறை கடந்த வழிபாட்டு முறையினர். ஆகலின், இரு சமயப் பிணக்கு களையும் தீர்க்க எவ்வளவோ முயன்றுளர்.அத்தகையருள், சிவவாக்கியர்க்கும் தனிப்பெரும் பங்குண்டு.

ஐந்தெழுத்து மந்திரத்தைப்பற்றி எவ்வளவு உரத்து றுதியாய்க் கூறுகின்றாரோ, அதே அளவு உரத்து உறுதியாய் எட்டெழுத்து மந்திரத்தைக் கூறுகின்றார். 'சிவவாக்கியர்' என்னும் பெயர் பூண்டு, தம் வாக்கைச் சிவ வாக்காகவே மொழிந்தவர் 'சிவாயமே' என்று சொல்வதிலோ, 'நமசிவய' என்பதை விளக்குவதிலோ வியப்பு இல்லை. பலப்பல பாடல்களைச் சிவபெருமான்மேல் பாடும் அளவுக்கு ‘இராம' மந்திரத்தை அழுத்திக் கூறுகின்றார். தில்லைப் பெருமானைச் சொல்லும் இடத்திலே திருவரங்கப் பெருமானையும் இணைத்தே கூறுகின்றார். செங்கண் மாலும் ஈசனும் என இணைக்கும் அவர் 'சங்கர நாராயணர்' இணைப்பையும் விட்டார் அல்லர். உவமையால் இருவர் இயைவையும் விளக்கவும் முற்படுகிறார். "தங்கம் ஒன்று; உருவம் வேறு; அதுபோல் செங்கண் மாலும் ஈசனும் சிறந்திருத்தலைச் சுட்டுகிறார். நாழி உப்பும் நாழி அப்பும் (நீரும்) நாழியானவாறுபோல் ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்வதைச் சுட்டி,

"வேறுவேறு பேசுவார் வீழ்வர் வீணிலே நரகிலே”

என்று வசை கூறுகின்றார்.

“பல்லும் நாவும் உள்ளபேர் பகுந்து கூறி மகிழுவார்

வல்ல பங்கள் பேசுவார் வாய்பு ழுத்து மாய்வரே”

என்றும் பிளந்து பேசுவாரை எரிகிறார்! இனி இவ்விரு கடவுளர் அல்லர்; நான்முகனும் சரி; பிற கடவுளரும் சரி! ஒரு கடவுளரே என்பாராய்,

'அறிவினோடு பாரும் இங்கும் அங்கும் எங்கும் ஒன்றதே"

என்று தெளிவிக்கிறார். இன்னும் ஓங்கிச் சொல்கிறார்; “எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றி ரண்டு தேவரோ இங்கும் அங்கு மாயிரண்டு தேவ ரேயிருப்பரோ அங்கும் இங்கும் ஆகி நின்ற ஆதி மூர்த்தி ஒன்றலோ வங்க வாரம் சொன்ன பேர்கள் வாய்பு ழுத்து மாள்வரே.” என்பதும்,