உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இளங்குமரனார் தமிழ்வளம் -37

“எங்கும் உள்ள ஈசனார் எம்மு டல்பு குந்தபின்

பங்கு கூறு பேசுவார் பாடு சென்றே அணுகிலார்

எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றிரண்டு பேதமோ உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே! என்பதும் கருதத்தக்கன.

றையுண்மை

சித்தர் சிவவாக்கியர், உயிர் உண்மையால் இறையுண்மையைத் தெளிவாக்குகிறார். வித்தில்லாத விளைவு ஒன்று இல்லை; தச்சு இல்லாத மாளிகை இல்லை; சித்தில்லாதபோது சிவன் இல்லை என மொழிகின்றார்.

"எங்கும் இறையாய் எல்லாம் இறையாய்க் காணும் சித்தர் இறையை ஒழித்து யான் ஒன்றையும் காணேன்; பற்றிலாத இறை பற்றில்லாத ஒன்றையே பற்றி நிற்கும்; கற்றதால் இறையைக் காண முடியுமோ? பெற்றோர்களைக் கேட்டு இதனைத் தெரிந்து கொள்க" என்கிறார்.

அறிந்து ஒதுதல்

வெறுங் கல்வியால் மட்டும் இறைவணைக் காண முடியாது என்பது சிவவாக்கியர் அழுத்தமான கொள்கை! "இறைவனை அறிந்த பின்னே வேதம் என்ன? ஆகமம் என்ன? விளக்க நூல்கள் என்ன? இவையெல்லாம் கட்டி வைத்த சரக்குகள்! கதையாகச் சொல்லும் பிதற்றல்கள்" என்கிறார்?

இந்நூல்களை ஓதுவோரேனும் பொருளறிந்து ஓது கின்றனரா என்றால் அதுவும் இல்லையே என வருந்துகிறார் சிவவாக்கியர். அதனால்,

“அஞ்செ ழுத்தி லேபிறந்த தஞ்செ ழுத்தி லேவளர்ந் தஞ்செ ழுத்தை ஒதுகின்ற பஞ்ச பூத பாவிகாள்! அஞ்செ ழுத்தில் ஓரெழுத்தை அறிந்து கூற வல்லிரேல் அஞ்சல் அஞ்சல் என்றுநாதன் அம்ப லத்தில் ஆடுமே' என்கிறார்.

பொருளுணராது ஓதுவாரைப்,

“பொத்த கத்தை மெத்த வைத்துப் போத மோதும் பொய்யர்” என்று பழிக்கிறார்.