உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இளங்குமரனார் தமிழ்வளம் -37

வாய்திறத்தலும் திறவாமையும்

பாலுள் நெய் இருப்பதுபோல் அகத்துள் இறைவன் இருக்கிறான் என்றும், எள்ளகத்தில் எண்ணெய்போல எங்குமாகி எம்பிரான் உள்ளகத்திலே இருக்கிறான் என்றும், தென்னையில் இளநீர் சேர்ந்தது போல இறைவன் என்னுள்ளம் புகுந்து கோயில் கொண்டான் என்றும் உரைக்கிறார் சிவவாக்கியர். இந்நிலைமை ஏற்பட்டபின் தம் நிலையில் உண்டான ஒரு மாற்றத்தையும் சுட்டுகிறார் அவர்:

“ஐயன் வந்தே என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்

வைய கத்தில் மாந்தர் முன்னம் வாய்தி றப்ப தில்லையே”

வாய் திறவாமை என்பது என்ன? நிறைநிலை ஏற்பட்ட பின் தருக்கம் செய்யவேண்டிய தென்ன இருக்கிறது? "நெஞ்சின் நிறைவில் வாய்பேசும்" என்பர். ஆனால் நெஞ்சின் நிறைவு இறைமையாகி விட்ட போது 'ஒடுக்கம்' தானே வந்துவிடும்!

ஆனால் ஓர் ஐயம் எழும். 'மாந்தர் முன்னம் வாய்திறப் பதில்லையே என்பவர் பாடிவைத்தது ஏன்?' என்பதே அவ்வையம். தருக்கம் செய்வோர் முன் பேசுவதில்லை; எதிரிட்டு வழக்காடுவ தில்லை என்பது தானே சிவவாக்கியர் கருத்து. ஆனால், அவர் கொண்ட தெளிவினை உலகமும் கொள்ளவேண்டும் என்ற வேட்கை எழும்பியல்லவோ பாடுகின்றார்? பாடுவது உலகத்தை உய்விக்க உதவுதால் அதனைச் செய்கின்றார். தருக்கமிடுவதால் பயனில்லை என்பதைத் தெளிவாக்கிக் கொண்டதால் வாய்திறப் பதில்லை என்றார். இந்நிலை வேறு; அந்நிலை வேறு எனத் தெளிந்துகொள்க.

வினாவுதல்

கண்ணைத் தோண்டிவைத்தாலும் கண்கட்டு வித்தை என்று சொல்பவரைக் கண்டால் எவ்வளவு கொதிப்பு உண்டாகும்? கண்மூடித்தனத்தைக் கட்டிப்பிடித்துக் கைகோத்துக் களிப்பதே கடவுள் வழிபாடு எனக் கொண்டு விட்டவர்களைப் பார்த்துச் சிவவாக்கியர் என்னென்ன வினாக்களைத் தொடுக் கிறார்? ஒன்றா இரண்டா?

உடம்பு உயிர் எடுத்ததோ? உயிர் உடம்பு எடுத்ததோ? உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது?

உருத் தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே?

கருத் தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே?