உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

அக்கரம் அனாதியோ? ஆத்துமம் அனாதியோ? புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ?

உயிரிருந்த தெவ்விடம் உடம்பெடுப்ப தின்முனம் உயிர் தாவ தேதடா உடம்ப தாவ தேதடா உயிரையும் உடம்பையும் ஒன்று விட்ட தேதடா

உயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா?

25

ப்படிப் பலப்பல வினாக்கள்! பலப்பல பாடல்களில் வினாக்கள்! வினாவைப்போல மெய்யுணர்வாளான் ஒருவன் உளனோ? ஒருவன் மெய்யுணர்வாளன் ஆயதே வினாவி அறிதலைக் குறிக்கோளாகக் கொண்டதால் தானே? அவ்வழியே செவ் வழியாகக் கொண்டு வினாவுதல் வழியாக விளைவுகாண முயல்கிறார் சிவவாக்கியர்.

சித்தரியற்கை

சித்தர் சிவத்தைக் கண்டவர்; சிவத்தைக் கொண்டவர்; சிவ மாயவர்; ஆதலால் அவருக்குப் பொதுமக்கள் வழிபடுதற்காக அமைத்த கோயிலைப் பற்றியோ, குளங்களைப் பற்றியோ, நீர்த் துறைகளைப் பற்றியோ, வடிவமைப்பு வழிபாட்டு நெறிகள் மந்திரங்கள் தந்திரங்கள் ஆகியவை பற்றியோ அக்கறை இல்லை. அதுவுமன்றிக் கோயில் முதலியவையும் வணிக நிலையங்கள், தொழில் கூடங்கள், சூதாட்டுக் கழகங்கள், சிறுமை ஆட்டச் செயலகங்கள் போல வீழ்ந்து பட்டுக்கிடக்குமானால் உயரத்தின் உயரத்தில் ஏறிப் பறக்கும் சித்தர்கள் பார்வையில் அவை எத்துணைத் தாழ்ந்து தோன்றும்! தோன்றும் உணர்வை எதற்காக அவர்கள் மறைத்துக் கூறவேண்டும்? நெஞ்சில் பட்டதை நேரில் கூறுவதுதானே சித்தர்கள் இயற்கை!

எவரைப் பசப்பிப் பேசியோ, இல்லாததைப் பொல்லாததைப் புனைந்து கூறியோ அவர்களுக்கு ஆவதென்ன? எவரிடமேனும் எதையேனும் எதிர்பார்த்து ஆகவேண்டிய நிலையிருந்தால் எத்தகைய தீமைகளையும், குறைகளையும் அரவணைத்துக் கொண்டுபோக நேரிடும். அரவணைக்க முடியாதுபோனாலும் குறைசொல்லாமல் கண்டுகொள்ளாதது போல் ஒதுங்கவேண்டி நேரும். இக்காலத்தில், பணம், பதவி, கட்சி, அரசு, பிழைப்பு, பெருமை இவற்றைக் கருதிக், கூடாத கூட்டுகள் கூடுவது இல்லையா? பாடாத பாட்டுப் பாடுவது இல்லையா? நெஞ்சைத் தொட்டுப் பார்த்துச் சொல்வார்களானால் அவர்கள் நடிப்பும்