உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இளங்குமரனார் தமிழ்வளம் - 37

பரத்தைமையும் ஒவ்வொரு நாடித் துடிப்பு வழியாகவும் தோன்றும்! ஆனால் அவர்கள் நெஞ்சைத் தொட்டுப் பார்ப்பதே இல்லை. அதுமட்டுமில்லை! நெஞ்சம் ஒன்று இருப்பதாகவும் நினைப்பும் இல்லாதவர்கள் நெஞ்சை ஏன் தொட்டுப் பார்க்கிறார்கள்?

சித்தர்களுக்கு இச்சிறுநிலை இல்லையே! உள்ளத்தால் பொய்யா தொழுகும் சித்தர், உலகத்தாரைப்பற்றி - அவர்தம் நினைப்பைப் பற்றிப் பொருட்டாக எண்ணாமல் திட்டத் தெளிவாகக் கூறுகின்றனர்.

புரட்சி

-

சிவவாக்கியர் சித்தர்களுள் பெரும் புரட்சியாளர். இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலே எல்லார்க்கும் ஒத்த உரிமை-எல்லார்க்கும் எல்லாம் - என்று மேடைதோறும் முழங்கும் நாளிலே துணிந்து சொல்ல முடியாதவற்றை யெல்லாம் சொல்கிறார்! நேருக்கு நேர் பச்சையாகச் சொல்கிறார். அவர் சொல்வதைக் கடைப்பிடியாகப் பொதுமக்கள் கொண்டி ருந்தால் சமயத்தில் இவ்வளவு அழுக்கு மூட்டைகள் தேங்கியிரா! தெய்வம் பூதம் என்று பொய்யும் புரட்டும் செய்வார் முகத்திரைகள் கிழிபட்டுப் போயிருக்கும். உண்மைச் சமயம் உயிர்த் தெழுந் திருக்கும்!

"கடவுள் இல்லவே இல்லை! கடவுளைக் கற்பித்தவன் காட்டு விலங்காண்டி!" என்றெல்லாம் கூறும் நம்பா மதம் வேண்டியிருந்திருக்காது! ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மதத்திற்குத் தாவும் இக்கட்டும், தாவிப் போகின்றாரே தம் சமயத்தை விடுத்து என்னும் தவிப்பும், எங்களை மதித்துப் போற்றாத மதத்தை நாங்கள் கட்டியழ வேண்டியது என்ன என்னும் கொதிப்பும் ஏற்பட்டிரா! இன்னும், குலப்பிரிவிலே கொடிகட்டி வாழமுடியும் என்னும் குள்ளமதிச் செயல் இரத்தத்தில் இரத்தமாக ஊறிப்போய்க் கிடக்கும் ஒருநிலை இல்லாதது ஒழிந்திருக்கும்! தொண்டு செய்யாத சமயத்தைக் கண்டு கொள்ள எவரும் மாட்டார் என்னும் தெளிவேனும் ஏற்பட்டுச், சோற்றுச் சமயமே சமயமாக இருக்கும் நிலைமாறி இருக்கும்! இந்நிலையில் ஏய்த்துவாழ்வோர் சித்தர் நெறியைப் போற்றவோ பரப்பவோ முன் வருவரோ? தன் அடிவயிற்றிலே இடியைக் கட்டிக் கொள்ள எவனே முந்துவான்! படித்த கூட்டம் மறைத்தது! பாழும் பத்திக் கூட்டம் பாராது ஒழிந்தது. சித்தர் நூல்கள் 'சிவமே' யாய்க் கிடந்தன! சித்தர் நெறியென ஒன்றைச்