உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இளங்குமரனார் தமிழ்வளம் 37 ❤

-

'ஓசை உள்ள கல்லைநீர் உடைத்தி ரண்டாய்ச் செய்துமே வாச லில்ப தித்தகல்லை மழுங்க வேமி திக்கிறீர்

பூச னைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்துறீர் ஈச னுக்கு கந்த கல் எந்தக் கல்லு சொல்லுமே"

கல்லில்தான் இறைவன் இருக்கிறான் என்பதைக் கேட்டுச் சித்தருக்கு நகைப்பே வருகின்றதாம்:

'சாவ தான் தத்துவச் சடங்கு செய்யும் ஊமைகாள் தேவர் கல்லும் ஆவரோ சிரிப்ப தன்றி என்செய்வேன் மூவ ராலும் அறியொணாத முக்க ணன்மு தற்கொழுந்து காவ லாக உம்முளே கலந்தி ருப்பன் காணுமே!”

கல்லில் மட்டுமா கடவுள் வடிவம்? எத்தனை எத்தனை வகை மாழை (உலோக) வடிவங்கள்:

66

'கல்லு வெள்ளி செம்பிரும்பு காய்ந்தி டுந்த ராக்களில் வல்ல தேவ ரூபபேதம் அங்க மைத்துப் போற்றிடில் தொல்லை அற்றி டப்பெரும் சுகந்த ரும்மோ சொல்லுவீர் இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை இல்லையே!"

புறக்கோலமே கோலமாகக் கொள்ளும் பொய்யடியார் களையும், போலியடியார்களையும், புனைவடியார்களையும் பார்க்கிறார் சிவவாக்கியர். மனம் புழுங்குகிறார். இவர்கள் சட்டியாகவும் சட்டுவமாகவும் இருக்கிறார்களே ஒழிய உணர்வுடையவர்களாக இவர்கள் இல்லையே! கறிச் சுவையைச் சட்டி அறியுமா? சட்டுவம் அறியுமா? அவற்றுக்கும் கறிக்கும் உள்ள தொடர்பென்ன? ஒட்டாத் தொடர்பு தானே! இவர்கள் நிலையும் அப்படித்தானே இருக்கிறது! இறைவன் தம் உள்ளே ருக்கிறான் என்னும் உண்மையை உணராமல் கைகட்டி வாய்பொத்தி, தலைகுட்டி நிலம்பட வீழ்ந்து பூவை எறிந்து நாவைத் திறந்து வழிபடுவதால் என்ன பயன் விளையப்போகிறது என்று எண்ணிப் பாடுகிறார்:

“நட்ட கல்லைத் தெய்வ மென்று நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து மொணமொ ணென்று சொல்லும் மந்த்ரம் ஏதடா நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளி ருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சு வைய றியும்மோ?'