உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

சிவவாக்கியர்

29

நட்ட கல்லைத் தெய்வம் என்று கொள்ளக் கூடாது என்றவுடன் தெய்வமே இல்லை என்பவர் சிவவாக்கியர் என்னும் முடிவுக்குப் போய்விடுதல் முற்றிலும் முரண்பட்டதாம்! அவர் சொல்லலாம் நட்ட கல்லைத் தெய்வம் அன்று என்று! ஏனெனில் அவர் "உள்ளே நாதன் இருக்கிறான் என்பவர் உள்ளேயே நாதன் இருக்கும்போது வெளியே தேடவேண்டியது என்ன? அது உள்ளே இருந்து பேசும் பேச்சைத் தாம் பேசுவதாக இருக்கும் போது 'நட்ட கல் பேசும்' என்று ஏன் எதிர்பார்க்க வேண்டும்? முற்ற முதிர்ந்த முழுநிறை நிலையில் ஒருவர் பேசும் பேச்சை அவர் நிலையில் முற்றவும் நெருங்காததுடன் முற்றிலும் மாறுபட்டுச் செல்பவர், வேண்டும் சொல்லை மட்டும் எடுத்துக்கொண்டு வேண்டுமாறு பொருள் செய்து கொள்வதால் தம் அறியாமையை அழுத்தமாகக் காட்ட முடியுமேயன்றி அறிவாளித் தன்மையை எள்ளத்தனையும் காட்டியதாகாதாம். அவர் எறிநின்ற படி எங்கே? இவர் வீழ்ந்து பட்ட சறுக்கல் எங்கே?

எங்கும் ஓர் இறை

9

இனிச் சிலர் "இந்தக் கோயில்தான் சிறந்தது; அந்தக் கோயில் தான் சிறந்தது; இந்தக் கோயில் தெய்வம்தான் துடியானது; கேட்டதைக் கேட்டபடி அருள்வது; கண்ணாரக் காட்சிதரும் தெய்வம் இந்தக் கோயிலில் உள்ளதுதான்" என்று அவரவர் மனம் வந்தவாறு கூறுவதுண்டு! அதற்காக அலைபாய்ந்து திரிவதும் உண்டு. "தெய்வம் ஒன்றென்றிரு! தெய்வம் உண்டென்றிரு" என்பவர்கள் அப்படி அலைந்து அலைக்கழிவரோ? எங்கும் உள்ள தெய்வம் அங்கும் உண்டு என்று அமைவர். இடவேறுபாடு, தெய்வ ஆற்றல்வேறுபாடு காட்டித் திரிவாரை நோக்கிச் சித்தர் சிவவாக்கியர் சொல்கிறார். “இந்த ஊரில் இல்லை என்று எங்கு நாடி ஓடுறீர் அந்த ஊரில் ஈசனும் அமர்ந்து வாழ்வ தெங்ஙனே' "எங்கும் எங்கும் ஒன்றலோ ஈரேழ் லோகம் ஒன்றலோ அங்கும் இங்கும் ஒன்றலோ அனாதி யான தொன்றலோ தங்கு தாப ரங்களும் தரிந்த வாற தொன்றலோ

உங்கள் எங்கள் பங்கினில் உதித்த தேசி வாயமே.

வஞ்சவேடம்

வேட்டைக்குச் செல்பவர்கள் எந்தப் பறவையை அல்லது விலங்கை வேட்டையாட வேண்டுமோ, அதன் ஒலியைப்போல