உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

66

-

இளங்குமரனார் தமிழ்வளம் 37

'காலை மாலை நீரிலே முழுகும் அந்த மூடர்காள் காலை மாலை நீரிலே கிடந்த தேரை என்பெறும்? கால மேஎ ழுந்திருந்து கண்கள் மூன்றில் ஒன்றினால் மூல மேநி னைப்பிராகில் முத்தி சித்தி ஆகுமே!

இதனை,

“முகத்துக் கண் கொண்டு பார்க்கின்ற மூடர்காள்

அகத்துக் கண் கொண்டு காண்பதே ஆன ந்தம்’

99

என்பார் திருமூலர். சிவவாக்கியர் 'கண் மூன்றில் ஒன்றினால்' என்று அகக் கண்ணைச் சுட்டுகிறார். அகக் கண்ணாவது புருவ நடுவில் அமைந்த 'சுழிமுனை' அல்லது நெற்றிக் கண்ணாம்!

மெய்யுணர்வு இல்லாதார், மேனி அழுக்குப் போக்கி ஆகும் பயன் இல்லை என்றார். அழுக்குப் போக்காமல் நாறிக் கிடக்க வேண்டும்; அதுவே நண்பனை அடையும் வழி என்பதோ சிவவாக்கியர் கருத்து என எவரும் எண்ணார். அக அழுக்குப் போக்காமல் புற அழுக்கைப் போக்கிக் கொண்டிருத்தலால் பயனில்லை. ஈரழுக்குகளையும் போக்கி இன்பம் எய்துக என்பதே அவர் உரையாம். நல்லொழுக்கத்தில் தலையாயது நாட்காலை நீராடல் என்பது நம்மவர் கொள்கை! ஆனால் அஃதொன்றே என்று கொண்டு நீராடுதலை மட்டும் தவறாமல் செய்து நீர்மையில்லாச் செயல்களிலேயே சென்றால் நீராடு தலால் பயன் உண்டா? நீராடுதலே பிறரை ஏமாற்றுதற்குச் செய்யும் செயல் என்றாகி விடுமல்லவா!

குடமுழுக்கு

ww

இனி, இறைவன் திருவுருவுக்கு நீராட்டுதலால் குடம் குடமாக நீர் விட்டு - நீராட்டுதலால், பாலும் பழச்சாறும் பாகும் தேனும் பிறவும் விட்டு முழுக்காட்டுதலால் பயனுண்டோ? என்பதையும் சிவவாக்கியர் சொல்கிறார்.

சுமக்கமாட்டாத குடங்களில் நீர்எடுத்து, ஏற மாட்டாத உயரத்தில் இருக்கும் கோயிலுக்குக் கொண்டு சென்று குளிப்பாட்டுதல் இல்லையா! உடல்நலம், உளநலம்,உயிர்நலம் எல்லாம் ஒருங்கே தரக்கூடிய அச்செய்கையும் உணர்வோடும் வாராக்கால் என்ன பயன்? மெய்ப்பொருள் உணர்வின்றிப் பொய்ச் செயலாக இருக்குமானால் அதனைச் செய்தால் என்ன? செய்யாமல் ஒழிந்தால் என்ன? இவை சிவவாக்கியர் சிந்தனை!