உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

33

தாம் குளிக்கும்போதே, குளிக்கும் அந்நீரை அள்ளியே இறைவனை எண்ணி நீரைத் தெளிப்பது ஒரு வழிபாடு! குளித்த பின்னர் ஈரவுடையுடன் நீர்க்குடம் தூக்கிச் சென்று முழுக் காட்டுதல் மற்றொரு வழிபாடு! இரண்டையும் பேசுகிறார் சிவவாக்கியர்.

“நீரை அள்ளி நீரில்விட்டு நீர்நி னைந்த காரியம்

ஆரை உன்னி நீரெலாம் அவத்தி லேஇ றைக்கிறீர்? வேரை உன்னி வித்தை உன்னி வித்தி லேமு ளைத்தெழுந்த சீரை உன்ன வல்லிரேல் சிவப தங்கள் சேரலாம்"

"அள்ளி நீரை இட்டதேது அங்கை யில்கு ழைத்ததேது மெள்ள வேமி ணமிணென்று விளம்பு கிற்கு மூடர்காள் கள்ள வேடம் இட்டதேது கண்ணை மூடி விட்டதேது மெள்ள வேகு ருக்களே விளம்பி டீர்வி எம்பிடீர்” புனைகோலம்

நீராட்டம் வழிபாடு என்று போனாலும் எத்தனை எத்தனை அணிகலங்கள்! ஆடைகள்! பூச்சிகள்! புனைவுகள்! கொம்பை விட்டு வாலைப் பிடித்தல் போலக் கொள்கை இல்லாக் கொள்கைகள். இவற்றையும் சுட்டுகிறார் சித்தர்:

“குண்ட லங்கள் பூண்டுநீர் குளங்கள் தோறும் மூழ்குறீர் மண்டு கங்கள் போலநீர் மனத்தின் மாச றுக்கிலீர் மண்டை ஏந்து கையரை மனத்தி ருத்த வல்லிரேல்

பண்டை மால்அ யன்தொழப் பணிந்து வாழ லாகுமே

""

வண்டின் எச்சிலாகிய தேனைப் பொழிந்து வழிபாடு செய்வதையும், மண்குடத்து நீரை மலைமேல் கொண்டு சென்று தலைமேல் கொட்டுவதையும் குறித்துக் கூறுகிறார்.

“மாறு பட்ட மணிதுலக்கி வண்டின் எச்சில் கொண்டுபோய் ஊறு பட்ட கல்லின்மீதே ஊற்று கின்ற மூடரே”

“மண்கி டார மேசுமந்து மலையுள் ஏறி மறுகிறீர் எண்ப டாத காரியங்கள் இயலு மென்று கூறுறீர் தம்பி ரானை நாள்தோறும் தரையி லேத லைபடக் கும்பி டாத மாந்தரோடு கூடி வாழ்வ தெங்ஙனே?”