உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

-

இளங்குமரனார் தமிழ்வளம் 37

தரையிலே தலைபட வழிபடல் என்பதென்ன? மண்ணை வணங்குதல்! மண் என்பது என்ன? மண்ணுலகத்து உயிர்களை யெல்லாம் மதித்துப் போற்றி இருத்தல். ஏன்? இறைவன் உயிரகத் தெல்லாம் உயிராக இருப்பவன் அல்லனோ? கண்கண்ட உயிர்களைப் போற்றி உதவியாக வாழாத ஒருவன் - உயிர்களின் நல்வாழ்வுக்காக உருகாத ஒருவன் கண்ணீர் வடித்துக் கடமை புரியாத ஒருவன் கடவுள் சிலைமேல் தண்ணீர் விட்டுக் கழுவியதால் பயன் என்ன? என்பாராய் இவ்வாறு சுட்டினார்.

-

சிவவாக்கியர் தாம் காணும் 'தீர்த்தம்' குறிப்பிடுகிறார். அஃது அஞ்செழுத்துத் தீர்த்தமாம்.

"தீர்த்தம் ஆட வேண்டுமென்று தேடு கின்ற தீனர்காள் தீர்த்தம் ஆடல் எவ்விடம் தெளிந்து நீர் இயம்பிலீர் தீர்த்த மாக உம்முளே தெளிந்து நீர்இ ருந்தபின்

தீர்த்த மாக உள்ளதும் சிவாய அஞ்செ ழுத்துமே!'

ஒன்றைக்

மெய்ப்பொருள் நாயனாரைக் காண்பதற்கு முத்தநாதன் வந்தான். அவன் மனத்திலே கறுப்பு இருந்தது; உடையிலோ காவிச் சிவப்பு இருந்தது. திரிவிளக்கு எரியும்போது திரியை ஒட்டிக் கறுப்பும் அதன்மேல் சிவப்பும் தெரிவது இல்லையா! அதுபோல் அவன் தோன்றினான்! அவன் உடல் முழுவதும் திருநீறு; தலையில் சடை; கையில் சுவடியைப்போல் மறைத்து வைத்திருந்த வாள்; இதுதான் அவன் பொய்க்கோலம்! அக் கோலம் என்ன செய்தது? அடியார் கூட்டத்திற்கே அகலாப் பழியாய் என்றும் இருக்குமாறு மெய்ப்பொருள் நாயனாரைக் குத்திக் கொடும்பழி தேடிக்கொண்டது! பசுவாகவே தோன்றினால் குற்றமில்லை உண்மை தெரியும்! புலியாகவே இருந்தாலும் குற்ற மில்லை -உண்மை தெரியும்! ஆனால் பசுத்தோல் போர்த்த புலியாக இருந்தால் எவ்வளவு கேடு? நம்பவைத்து நயமாகக் கேடு செய்துவிடுமல்லவா!

-

அடியார் கோலங்கொண்டு ஆகா வழியில் செல்வாரைச் சிவவாக்கியர் வன்மையாகக் கண்டிக்கிறார்; உள்ளொன்று வைத்துப் புறமொன்று காட்டுவாரை உள்ளார வெறுக்கிறார்.

"பிறந்த போது கோவணம் இலங்கு நூல்கு டுமியும் பிறந்து டன்பி றந்ததோ பிறங்குநாள் சடங்கெலாம்”

என்கிறார்.