உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

"காவி யும்ச டைமுடி கமண்ட லங்கள் ஆசனம் தாவு ருத்தி ராட்சம் யோகத் தண்டுகொண்ட மாடுகள் தேவி யைஅ லைய விட்டுத் தேசம் எங்கும் சுற்றியே

பாவி யென்ன வீடெலாம் பருக்கை கேட்டு அலைவரே."

35

மனைவி மக்களை அலைய விடுகிறார்களாம்! நாடு நாடாக அலைகிறார்களாம்; 'பாவி பாவி' என்று பலரும் திட்டப் பழிச்செயல் புரிகின்றார்களாம்; வீடுதோறும் பருக்கை (சோறு) கேட்டு அலைகின்றார்களாம்! இந்தப் பிழைப்பு என்ன பிழைப்பு என்று சுட்டுகிறார் சிவவாக்கியர்.

தேர்த்திருவிழா

அடியார் வேடமிட்டு அலைக்கழிவு செய்வதை மட்டும் சித்தர் சொல்லி நிற்கவில்லை! தேர்த்திருவிழா என்னும் பெயராலும், எழுந்திருத்து ஊர்வலம் என்னும் பெயராலும் எவ்வளவு வீண்கள்! வேடிக்கைகள்! இவற்றையும் தெளிவாக்கு கிறார்.

“ஊரிலுள்ள மனிதர்காள் ஒரும னதாய்க் கூடியே

தேரி லேவ டத்தை விட்டுச் செம்பை வைத்தி ழுக்கிறீர் ஆரி னாலும் அறியொணாத ஆதி சித்த நாதரை

பேதை யான மனிதர் பண்ணும் பிரளி பாரும் பாருமே!"

பிரளியாவது பிரட்டு என்னும் புரட்டு! 'தலைப் பிரட்டு' என்பது இல்லையா? அதுபோல் இது சமயப் பிரட்டு என்க. ஊனும் உணவும்

இன்னும் சிலர், உண்ணாநோன்பு கொள்வதால் இறையருள் எய்தலாம் என்றும், சருகு காய் கனி உண்பதால் இறையருளைப் பெறலாம் என்றும், புலவூண் கொள்ளாமையால் இறையருளை அடையலாம் என்றும் கருதியிருக்கின்றனர். இவற்றைப் பற்றிய தம் கருத்தைச் சிவவாக்கியர் தெளிவிக்கிறார்.

“சருக ருந்தி நீர்குடித்துச் சாரல் வாழ்த வசிகாள்

சருக ருந்தில் தேகங்குன்றிச் சஞ்சலம் உண் டாகுமே! வருவி ருந்தோ டுண்டுடுத்தி வளர்மனை சுகிப்பிரேல் வருவி ருந்தோன் ஈசனாகி வாழ்வ ளிக்கும் சிவாயமே”

"மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்து சருகு முதலியவற்றை உண்டு நீர்குடித்து வாழும் துறவிகளே, சருகை உண்ணுதலால்