உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

-

இளங்குமரனார் தமிழ்வளம் 37

உடல் வலுக்குறையும்; உடல்வலுக்குறைய உளநிலை குன்றும்; உளநிலை குன்ற உணர்வு நிலை மங்கும்; இவற்றால் கண்ட நலம் என்ன? ஆனால், மனைக்கண் இருந்து விருந்துகளைப் பேணிப் பிறருக்கும் உதவியாக நீவிர் வாழ்ந்தால் இறைவனே நும் விருந்தாளியாக வந்து சேர்வானே" என்கிறார்.

புலாலுண்ணாமையால் இறைவன் திருவருளைப் பெறலாம்

என்பாரைப்பார்த்து,

“புலால்புலால் புலால்அ தென்று பேதமைகள் பேசுறீர் புலாலை விட்டு எம்பிரான் பிரிந்தி ருந்த தெங்ஙனே; புலாலு மாய்ப்பி தற்றுமாய்ப் பேருலாவும் தானுமாய்ப் புலாலிலே முளைத்தெழுந்த பித்தன் காணும் அத்தனே” என்கிறார்.

புலாலை விரும்பியுண்ணும் வேடனாய், புலாலைச் சுவைத்துச் சுவைத்துப் படைத்த திண்ணன் இறைவன் அருள் கூடலால் 'கண்ணப்பன்' ஆனானே! கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டு "அழுது ஆழுது அரனடி அடைந்த அடியாரும்" அவன் புகழ் பாடினரே! அவ்வாறாகப் புலாலுண்ணல் குற்றமாகிப், புலாலுண்ணாமை மேன்மையாகிவிடுமா? புலாலைக் கடந்து நிற்பது மெய்ப்பொருள் நாட்டம் எனக் கண்ணப்பர் வரலாற்றால் அறியலாம்.

ஆனால் சிவவாக்கியர் அந்த மேலோட்டச் சான்றில் தலைப்பட வில்லை. அவர் தம் வழக்கம் போல் மூலத்திற்குச் சென்று முடிச்சை அவிழ்த்து விளக்கம் காட்டுகிறார்.

-

புலால் என்பது என்ன? உடல் ஆம்! உயிர் தங்குதற்கு டமாம் உடல்! உயிர் உறையும் உடலாம் புலாலை விட்டு றைவனை வேறு எங்கே தேடிக் காண்கிறீர்! புலாலை விட்டுப் பிரியாத இறைவனை அதனை ஒழித்து எங்கே உங்களால் காண முடியும்? அவனே புலாலில் முளைத்தெழுந்த பித்தன்! உங்கள் புலால் பேச்சை விடுங்கள் என்கிறார்.

அவ்வாறானால் புலால் உண்க என்கிறாரா? அவர் புலால் உண்டாரா? இல்லை! புலாலுண்ணாமை ஒன்றே இறையருளைப் பெறுதற்கு வழியென்று அதனைக் கடைப்பிடித்து மற்றை ஈவு ரக்கம் துணை தொண்டு எவற்றிலும் ஈடுபடாமல் இருப்பார்க்கு அறிவு கொளுத்துதற்காகப், புலாலுண்ணாமையைப் போற்றும் நீங்கள் புலாலை இடமாகக் கொண்ட உயிர்களுக்கு எல்லாம்