உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

37

இரங்குங்கள்; அவ்வுடல்களிலெல்லாம் இறைவன் உள்ளான்; அவ்வுயிர்களுக்கு நலஞ் செய்வதே இறை வழிபாடு என்று கூறினாராம்.

இரத்தத்தில் இருந்து பிரிந்து வந்த பாலை உண்டு வளர்ந்தவர்கள் புலாலை உண்டதில்லை என்று சொல்லலாமா? என நகையாடுகிறார்:

“உதிர மான பால்குடித் தொக்க நீர்வ ளர்ந்ததும் இதர மாக இருந்த தொன்றி ரண்டு பட்ட தென்னலாம் மதிர மாக விட்ட தேது மாமிசம் புலால்அதென்று

சதிர மாய்வளர்ந்த தேது சைவ ரான மூடரே!”

மீன் இறைச்சி தின்றதில்லை என்னும் வேதியர் மீன் இருக்கும் நீரிலே மூழ்குவதும் அதனைக் குடிப்பதும் இல்லையோ? மான் இறைச்சி தின்றதில்லை என்னும் வேதியர் மான் தோலை அல்லவோ மார்பில் நூலாக அணிகின்றனர்!

ஆட்டிறைச்சி தின்றதில்லை என்பவர் வேள்வியில் படைப்பது ஆட்டிறைச்சி அல்லவோ!

மாட்டிறைச்சி தின்றதில்லை என்பவர் பயிர் வகைக்கு உரமாக இடுவது மாட்டிறைச்சி அல்லவோ!'

இப்படி அடுக்கடுக்காக வினாக்களை எழுப்பி விடையிறுத்து நகையாடுகிறார்.

பலியிடல்

நேர்த்திக்கடன் காரணமாக ஆடு கோழிகளைக் காவு தருவதைக் கண்டிருக்கிறார் சிவவாக்கியர்! நீங்கள் எந்தத் தெய்வம் அருள் செய்யும் என்று பலி தருகின்றீர்களோ; அதே தெய்வம் உங்களை உண்மையாக உருக்குலைக்கும்; மூஞ்சூராக உங்களைப் பிறக்க வைக்கும் என்று வசை மொழிகின்றனர்:

'தங்கள் தேகம் நோய்பெறின் தனைப்பி டாரி கோயிலில் பொங்கல் வைத்து ஆடுகோழிப் பூசைப் பலியை இட்டிட நங்கச் சொல்லும் நலிமிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய் உங்கள் குலதெய்வம் உங்கள் உருக்கு லைப்ப துண்மையே!” பேயும் பேயரும்

சிறு தெய்வப் பலியைக் கண்டிக்கும் சிவவாக்கியர் பேய் என்று பிதற்றுபவர் பேயர் என்கிறார். பேய் உங்களைப் பூசை