உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இளங்குமரனார் தமிழ்வளம் -37

கேட்டதா? பிடாரி உங்களைப் பூசை கேட்டதா? உங்கள் உடலுக்குள்ளேதான் பேய் உள்ளதேயன்றி வேறு எங்கே உள்ளது என்கிறார்.

“பேய்கள் பேய்கள் என்கிறீர் பிதற்று கின்ற பேயர்காள் பேய்கள் பூசை கொள்ளுமோ பிடாரி பூசை கொள்ளுமோ ஆதி பூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுமோ காய மான பேயலோ கணக்க றிந்து கொண்டதே”

வழிபாட்டு நெறியில் புரட்சி காணும் சித்தர் சிவவாக்கியர் வாழ்வியல் நெறிபற்றியும் அழுத்தமாகவே சிந்திக்கிறார். சிந்தித்துக் கண்ட தெளிவைச் செவ்வையாக மக்கள் மையத்தில் வைக்கிறார். குலப் பிரிவு

மனித இனத்திற்குப் புற்றுநோய் போலப் புரையோடிக் கிடக்கும் கொடுமையானது சாதிப் பிரிவு! "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்றாலும், "ஒன்றே குலம்" என்றாலும், "நல்ல குலமென்றும் தீய குலமென்றும் சொல்லளவல்லால் பொருளில்லை" என்றாலும், “சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால், நீதி வழுவா நெறி முறையில் - மேதினியில், இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்" என்றாலும் ஆழப் படித்தவர்களும் விட்ட பாடில்லை; அறிவறிந்து படித்தவர்களும் அசைந்த பாடில்லை!

நந்தனாரையும் பாணாழ்வாரையும் கோயில்களிலே வழிபடத் தக்கவர்களாக வைத்துக் கொண்டும் அவ் வினத்தவர் களைத் தீண்டாதவர்களாக்கித் தங்களைத் தீட்டுப்படுத்திக் கொண்ட 'பெரியவர்கள்' நா அசைந்தால் நாடசையும் என்ற நிலை இருந்தது. இன்றும் அந்த நிலை மாறிற்றில்லை.

சாதிப் பிரிவு செய்வது சழக்கு என்று எண்ணாமல் சால்பு என்று எண்ணி அதனை “வருணாசிரம தருமம்" என்னும் முத்திரை குத்தி, அதனை விரித்துரைக்கும் நூலை "மனு தரும் சாத்திரம்" என்றும் நாணமின்றித் தம்பட்டம் அடித்துக்கொண்டு இருந்தனர். இன்றும் அந்நிலை மாறாதும் இருக்கின்றனர்.

'உயிர்தொறும் ஒளித்து நின்ற வஞ்சக் கள்வன்' இறைவன் என்று சொல்லிக்கொண்டே உயிர்களில் தலையாய உயிராம் மாந்தருள் சிலரைத் தீண்டத்தகாதவர் என்று ஆக்கிக் கோயில் வழிபாட்டுக்கும் கூட உரிமையற்றவராகச் செய்த கொடுமை